அஜித்துடன் டுயட் பாடும் த்ரிஷா

அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு
என்னவாக இருக்கும் என்று அஜித்குமாரின் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்களாம். எப்போதும் தனது படங்களுக்கு தமிழில் கவித்துவமான தலைப்புகளை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கௌதம் மேனன். எனவே தன் பாணியில் அஜித் நடிக்கும் இந்தப்படத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு தலைப்பை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன்.

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்போ ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதாக உள்ளது. இதை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலம் அஜித்தின் காதில் போட்டிருக்கிறார்கள். அஜித் இதை கௌதம் மேனனிடம் சொல்ல, அவரது கருத்தையும் கவனத்தில் கொண்டு தலைப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல55 என்ற தற்காலிகமாக குறிப்பிடப்பட்டு வரும் இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு பெண் குழந்தைக்கு தயாக நடிக்கிறார். இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் பெயர் ரியாவாம்!

அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளையே தற்போது படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் அஜித் - த்ரிஷா ஜோடிக்கான ஒரு ரொமான்டிக் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. சில படங்களில் பிரிந்த கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். தவிர அஜித் படம் என்பதால் கூடுதல் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அஜித் - த்ரிஷாவுக்கான பாடலை தாமரை எழுத, பாடகர் கார்த்திக்கின் குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்தத் தகவலை ஹாரிஸ் ஜெயராஜே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget