சதுரங்க நாயகி இஷாரா சிறப்பு பேட்டி

சமீபத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்திருப்பவர் இஷாரா. தமிழுக்கு இறக்குமதியாகி இருக்கும்
மற்றுமொரு மலையாளத்து தேவதை. பெரிய கண்கள். மொழு மொழு கன்னம். கொஞ்சம் பூசினமாதிரி உடம்பு என தமிழ் ரசிகனுக்கு பிடித்த மாதிரி இருக்கிறார் இஷாரா. வெண்மேகம் முதல் படமாக இருந்தாலும் சதுரங்க வேட்டைதான் இஷாராவை அடையாளம் காட்டி இருக்கிறது.

வெண்மேகம் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கீங்களே?

உங்களுக்கு தெரியாததா... எந்த சினிமா பேக்கிரவுண்டும் இல்லாம யாரோட வழிகாட்டுதலும் இல்லாம தன்னந்தனியா ஒரு பொண்ணு சினிமாவுல ஜெயிக்கிறதுக்கு எவ்வளவு போராடணும். அந்த போராட்டத்தை தாண்டிதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.

எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்தீங்க?

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் தான் டிகிரி படித்து கொண்டிருந்தேன். அப்போது எல்லாம் சினிமா பார்கிறதோட சரி. அதுல நடிப்போம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. திடீர்னு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து எனக்குத் தெரியாமலேயே என் பெயரில் மிஸ் கேரளா போட்டிக்கு அப்ளிகேஷன் போட்டுட்டாங்க. போட்டியில செலக்ட் ஆகி லட்டர் வந்த பிறகுதான் என்கிட்ட காட்டினாங்க. என்னோட அழகை என்னை விட அவுங்கதான் புரிஞ்சு வச்சிருக்காங்க. அவுங்க மனசை புண்படுத்தக்கூடாதுன்னு அதுல கலந்துகிட்டேன். என்ன ஆச்சர்யம் நான் ரன்னர் வரைக்கும் வந்துட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவங்க சிலர் நீங்க விளம்பரங்கள்ல நடிக்கலாமேன்னு சொன்னாங்க. அங்க ஆரம்பிச்சுது கேமரா வெளிச்சம் அப்படியே சினிமா பக்கம் வந்துட்டேன்.

இப்போ நடிக்கிற படங்கள்...?

அதிமேதாவின்னு ஒரு படத்துல நடிக்கிறேன். காலேஜ் போற பொண்ணு கொஞ்சம் கிளாமராவும் நடிச்சிருக்கேன். பப்பரப்பம் படத்தை சந்தோஷ் சிவன் அசிஸ்டெண்ட் இயக்குகிறார் பவர்புல்லான கேரக்டர் இப்போதைக்கு இதுதான் சொல்ல முடியும். இதுதவிர ஒக்கசாரி என்ற தெலுங்கு படத்துல கமிட் ஆகியிருக்கேன். சதுரங்க வேட்டை ரிலீசுக்கு பிறகு நிறைய படங்கள் வருது. பார்த்து கவனமாக பண்ணணும். சான்ஸ் கிடைக்குதுங்றதுக்காக எல்லா படமும் பண்ணி பெயரை கெடுத்துடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

சென்னையில தனியா இருக்கீங்களாமே?

நான் ஹாஸ்டல் வளர்ந்த பொண்ணு. அதனால தனியாக இருக்குறதுல எனக்கு பிரச்னை இல்லை. நான் துணிச்சலான பொண்ணு. கொஞ்சம் மேன்லியான பொண்ணுன்னு கூட வச்சிக்கலாம். எதையும் பட்டென்று பேசிவிடுவேன். பெண்களுக்கு உரிய நாணம், வெட்கம் கொஞ்சம் குறைவுதான். நான் துணிச்சலாக இருப்பதுதான் எனக்கான முதல் பாதுகாப்பாக நினைக்கிறேன். இப்போ கதை சொல்றதுக்கு நிறைய பேர் வர்றதால தனியா ஒரு பிளாட் புடிச்சிருக்கேன். அம்மா துணைக்கு வந்திருக்காங்க.

மூன்றாவது படத்திலேயே சொந்த குரல்ல பேசி இருக்கீங்களே?

என்னோட அந்த போல்டான குரல் டைரக்டருக்கு பிடிச்சிருந்தது. ஏன்னா படத்துல நான் பேசுறதெல்லாமே பவர்புல்லான டயலாக். அதனால நீங்களே பேசிடுங்கன்னு சொன்னாங்க. துணிச்சலா பேசிட்டேன். "அன்பை கொடுக்குறதும், மற்றவங்க அன்பை உணர்வதும்தான் வாழ்க்கை"ன்னு நான் பேசுற டயலாக்கிற்கு தியேட்டர்ல அப்படி கைதட்டுறாங்க.

மலையாள நடிகைங்க, நயன்தாரா மாதிரி கிளாமராவும் நடிப்பாங்க. ரேவதி மாதிரி ஹோம்லியா மட்டும் நடிப்பாங்க. நீங்க எந்த மாதிரி?

நான் வித்யா பாலன் மாதிரின்னு வச்சுக்குங்களேன். சவாலான கேரக்டர்களை எடுத்துக்கிட்டு அதுக்கு என்ன தேவையோ அதை கொடுக்கிறது. ஒரு கேரக்டருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கணுமா ஓகே. பிகினி உடுத்தணுமா அதுக்கும் ஓகே. கதையும், கேரக்டரும் பவர்புல்லா இருக்கணும் அவ்ளோதான்.

சதுரங்க வேட்டைக்கு பிறகு கேரியர் மாறும்னு எதிர்பார்த்தீங்களா?

இந்தப் படம் இல்லேன்னா இதுக்கு அடுத்த படத்துல என்னோட இடத்தை பிடிச்சிடுவேன். அதுக்காக கடுமையா உழைப்பேன். ஆனால் சதுரங்க வேட்டையில நடிக்கிறப்பவே இது வேற படம். நமக்கான படம் இதுதான்னு தெரிஞ்சுடுது.

பப்பாளியில நடிச்சது பற்றி பேசவே மாட்டேங்குறீங்களே-?

நீங்க கேட்கலியே... அது வேறு ஒரு டைப்பான படம். காமெடிக்கு இம்பார்ட்டன் இருந்திச்சு. படத்தோட டைட்டிலை பார்த்துட்டு நானும் முதல்ல கொஞ்சம் பயந்தேன். அப்புறம்தான் அதுல கல்வியை பற்றி பெரிய மெசேஜ் இருந்ததே தெரியவந்தது. என்னோட படங்கள்ல பப்பாளிக்கும் முக்கிய இடம் உண்டு.

காதல்... கல்யாணம்...?

முதல் பேட்டியிலேயே எல்லாத்தையும் சொல்லிவிட்டால். அடுத்த பேட்டிக்கு விஷயமே இருக்காதே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget