விலை மாதுவாக நடிக்கும் வரலட்சுமி

பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார் - வரலட்சுமி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னதாக அவர்களை ஒப்பந்தம் செய்தபோதே, கரகாட்டத்தை முறைப்படி பயிற்சி எடுக்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று இருவரிடமும் கண்டிப்பாக கூறிவிட்டார் பாலா.

காரணம், அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கரகாட்ட பயிற்சி மட்டுமின்றி, அவர்களது பாடி லாங்குவேஜையும் உணவு கட்டுப்பாடு மூலம் மாற்றியிருக்கும் பாலா, கிட்டத்தட்ட ஒரிஜினல் கரகாட்ட கலைஞர்களாகவே அவர்களை மாற்றிக்கொண்டு வந்து விட்டார். அதனால் தனது படத்தில் நடிக்கும்போது வேறு படங்களில் நடித்தால் அந்த கெட்டப் போய்விடும் என்பதால்தான் இந்த கண்டிசனாம்.

மேலும், பல மாதங்களுக்கு முன்பே படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டாலும் சமீபத்தில்தான் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா. இந்த நிலையில், அப்படத்தின் நாயகியான வரலட்சுமி கதைப்படி விலைமாதுவாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதனால் விலைமாதுக்களின் நடை உடைகளை பக்காவாக மைண்டில் ஏற்றுக்கொண்டு வரலட்சுமிக்கு நடிப்பு செல்லிக்கொடுக்கும் பாலா, அவரை ஒரிஜினல் கரகாட்டக்காரி மட்டுமின்றி, ஒரிஜினல் விலைமாது போலவும் செதுக்கிக்கொண்டிருக்கிறாராம்.

படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இருக்கிற முக்கியத்துவத்தை உணர்ந்த வரலட்சுமி, இதற்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதி, போடா போடி படத்திலேயே டப்பிங் பேசிய நானே இந்த படத்திலும் எனக்கு டப்பிங் பேசுவேன் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget