சன்னி லியோன் பாத்திரத்தில் இனியா

இந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற ‘டெல்லி பெல்லி’ திரைப்படத்தை தமிழில் ’சேட்டை’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றிகண்ட இயக்குனர்
கண்ணன். தற்போது இயக்கிவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’திரைப்படம் தனக்கு முக்கியமான திரைப்படமாக இருக்குமென்று கூறுகிறார் கண்ணன். 

விமல், சூரி, ப்ரியா ஆனந்த் தம்பி  ராமையா என கண்ணனின் நம்பிக்கைக்கு காரணங்கள் பல இருந்தாலும், எப்படியும் சன்னி லியோனை வைத்து சூப்பரான ’குத்தாட்ட பாடலை எடுத்துவிட வேண்டும் என பிளான் செய்து வைத்திருந்த அவரது எண்ணம் நிறைவேறவில்லை. சன்னி லியோன் வேறு கமிட்மெண்டுக்குள் சிக்கிவிட்டதால் 3 நாள் கால்ஷீட் கூட கிடைக்கவில்லையாம். எனவே சன்னி லியோனுக்கு பதில் வேறு யாரை ஆட வைப்பது என்று யோசித்த படக்குழுவினரின் லிஸ்டில் நீது சந்திரா மற்றும் இனியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

நீது சந்திராவை விட இனியா முறையாக நடனம் கற்றவர், தமிழ் தெரிந்தவர்(பாடல் வரிகளுக்கு ஏற்ற முகபாவணை காட்டுவதற்கு) பொன்ற திறமைகளை பெற்றிருப்பதால் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். திண்டுக்கல் - சென்னை சாலையில் அலங்கரிக்கப்பட்ட ஓடும் லாரியில் இந்த பாடலை படமாக்குகிறார்களாம். சமீபத்தில் வெளியான வடகறி படத்தில் சன்னி லியோனின் ‘நடனத்தை’ பார்த்த ரசிகர்களோ நீது சந்திராவை இனியா ஈடுகட்டிவிடுவார், ஆனால் சன்னி லியோனின் நடனத்திற்கு ஈடுகட்டுவாரா? என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget