கர்ப்ப கால உடல் பாதிப்புகள்

கர்ப்ப காலத்தின் போது தாய்க்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது குழந்தையையும் பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனடா மருத்துவ
நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்களாதேசை சேர்ந்த 340 கர்ப்பிணி பெண்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டனர். 

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் வைரஸ் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள், உட்படாதவர்கள் என 170 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரித்து கொண்டனர். 

குழந்தை பிறந்த பின்னர் அவர்களின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்தபோது, வைரஸ் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்படாத பெண்களின் குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியத்தோடும் அவர்களின் ஆரோக்கிய நிறையின் சராசரி 3178 கிராம் ஆகவும் காணப்பட்டது. 

வைரஸ் காய்ச்சலுக்கு உட்பட்ட பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியம், நிறை 2978 கிராம்கள் ஆகாவும், பரிசோதித்த போது அவர்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவும் காணப்பட்டணர் கர்ப்ப காலத்தில் ஏற்படும் காய்ச்சலை தவிர்க்க நல்ல சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 

மேலும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சுத்தமான காட்டம் உடைகளை அணிய வேண்டும். 

கர்ப்பகாலத்தின் போது உடல்நிலையில் ஏதேனும் சிறிது மாற்றம் ஏற்பட்டால் கூட மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். உங்கள் அலட்சியபோக்கு மற்றும் கவனக்குறைபாடு உங்கள் சிசுவை பாதிக்கும் என்பதை மறவாதீர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget