யங் சூப்பர் ஸ்டாராகும் பிரேம்ஜி

தமிழில் சினிமாவில் யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தையோடு வலம் வந்தவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்
அறிமுகமானபோது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார். கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சேர்ந்தது. படங்களில் அவரது பெயருக்கு முன் இந்த பட்டம் சேர்க்கப்பட்டது. ரசிகர்களும் ‘யங் சூப்பர் ஸ்டார் சிம்பு’ என்றே போஸ்டர்கள் ஒட்டினர். சிம்புவும் இந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் தற்போது யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தேவையற்ற சுமையாக கருதுவதாகவும், இந்த சுமையை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டார். தற்போது அந்தப்பட்டத்தை பிரேம்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதைப்பற்றி பிரேம்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், 

என் தலைவர் சிம்பு, யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கு கொடுத்துள்ளார். ஆதலால் இந்நாள் முதல் நான் யங் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget