பேய் படத்தில் நடிக்கும் அஞ்சலி

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படமாகும். பேய் நம்பிக்கை
உண்டா? என்று அஞ்சலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– 

நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகிறவர்கள் ஆவியாக மாறுகிறார்கள். தனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தேடி பிடித்து பேய்கள் பயமுறுத்தும். ஆனால் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பேய் ஒன்றும் செய்யாது. 

அனுமனை வழிபட்டால் பேய் தொல்லை இருக்காது. சிறு வயதில் இருட்டை பார்த்து பயந்து இருக்கிறேன். ஏதோ உருவம் இருட்டில் நடந்து போவதை பார்த்து இருக்கிறேன். வளர்ந்த பிறகு அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் பேய் பிடித்தவர்களை பார்த்து இருக்கிறேன். பேய் இருப்பது உண்மைதான். 

இவ்வாறு அஞ்சலி கூறினார். 

அஞ்சலி தமிழில் ‘ஜெயம்’ ரவி ஜோடியாக புதுப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து வந்து இந்த படத்தில் நடித்தார். அஞ்சலியை வைத்து களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற்றி புராணம்’ படம் பாதியில் நிற்கிறது. அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அவரை சமரசப்படுத்தி நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget