சமீபகாலமாக பாலிவுட்டில், ஒரு படம் ரூ.100 கோடியை வசூலிப்பது சர்வ சாதரணமாகிவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாது நல்ல
கதையம்சம் உள்ள சின்ன பட்ஜெட் படங்களும் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் பூனம் பாண்டேவின் படமும் ரூ.100 கோடி வசூலில் சேரும் என்கிறார்கள். பிரபல கவர்ச்சி புயல் பூனம் பாண்டே சினிமாவில் நாஷா என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் எனது டுவிட்டர் பக்கத்தில் நிறைய பணம் உள்ள தயாரிப்பாளரின் படத்தில் நடிப்பேன், படத்தை புரொமோட் பண்ண அவரிடம் நிறைய பணம் இருக்க வேண்டும், நாஷா பட தயாரிப்பு போன்று இருக்க கூடாது என்று கூறியிருந்தேன். அதன்படி கடவுள் விநாயகர் அருளால் இப்போது பெரிய தயாரிப்பாளரின் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். தி வேர்ல்டு நெட்வொர்க் எனும் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பூனம் பாண்டேவின் படம் தயாரிப்பது பற்றி தி வேர்ல்டு நெட்வொர்க் தயாரிப்பு நிறுவனத்தின் குமார் எம்ஜி கூறியிருப்பதாவது, நாங்கள் ஏற்கனவே நிறைய படங்களை வேறுறொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளோம், இப்போது முதன்முறையாக தனியாக படம் தயாரிக்கிறோம். எங்களது முதல் படத்தில் பூனம் தான் நடிக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து படங்களை வெளியிட உள்ளோம். பூனம் பாண்டேவின் நாஷா படம் நன்றாக இருந்தது, அதை இன்னும் புரொமோட் பண்ணியிருந்தால் படம் இன்னும் வசூலை குவித்து இருக்கும். இப்போது நாங்கள், பூனம் பாண்டேவை வைத்து தயாரிக்கும் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்ய உள்ளோம், அதற்கு அவரும் தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். நிச்சயம் அவரது திறமை இந்தப்படத்தின் மூலம் பெரிதும் பேசப்படும், அதுமட்டுமன்றி இந்தப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்து ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக