இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ஐ போன் 6

ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- அக்டோபர் 17-ல் வெளி வர உள்ளது. இது குறித்து
ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌ ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன் இந்தியாவில் அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களில் அதன் மின்கலன்களின் திறனிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

ஐபோன்  5 மற்றும் 5எஸ் காட்டிலும் ஐபோன் 6 மின்கல திறன் பன்மடங்கு அதிகமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 திறன்பேசிகள் எ8 செயலிகள் மூலம் இயக்கப்படுவதால் 50 சதவீதம் அளவிற்கு கூடுதல் திறன்மிக்க தாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐபோன் 6ன் விலை சுமார் ரூ.39 ஆயிரத்து ஐநூறுலிருந்தும் ஐபோன்6 பிளஸ்ன் விலை சுமார் ரூ.45 ஆயிரத்து 500லிருந்து  தொடங்கும் என தெரிகிறது.இந்த போன்கள் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget