ஐபோன் 6 முழு பார்வை

ஸ்மார்ட் போன் வரிசையில், அறிமுகமான நாள் முதலாய், மக்களிடையே அதன் தொழில் நுட்பத்திற்குப் புகழ் பெற்றது ஆப்பிள் நிறுவனத்தின்
ஐபோன். 2010 ஆம் ஆண்டு ஐபேட் வெளியான பின்னர், அடுத்துவர இருக்கும் ஐபோன் 6 என்ன வகையானதாய், எந்த புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் என மக்கள் பலவகையாய்க் கணித்து வந்தனர். அவர்களின் காத்திருப்பிற்கு சென்ற செப்டம்பர் 9ல் முற்றுப் புள்ளி இடப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் என இரண்டு போன்களை வெளியிட்டார். அவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் சார்ந்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
ஐபோன் 6ல் திரை 4.7 அங்குல அகலத்தில் உள்ளது. இதன் ரெசல்யூசன் 1334 x 750 பிக்ஸெல்கள். ஐபோன் 6 ப்ளஸ் போனின் திரை 5.5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ரெசல்யூசன் 1920 x 1080. இரண்டு போன்களும் 16, 64, 128 ஜி.பி. என ராம் மெமரியைக் கொண்ட மூன்று வகைகளாக வெளியாகின்றன. போனின் மெமரியை ஆப்பிள், 128 ஜி.பி. 
வரை உயர்த்தியது இதுவே முதல் முறை ஆகும். அதே நேரத்தில் 32 ஜி.பி. அளவில் ஸ்டோரேஜ் மெமரி தரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு மாடல் போன்களுக்கு இடையே 100 அமெரிக்க டாலர் விலை வித்தியாசம் உள்ளது. தங்கம், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் இவை வெளியாகியுள்ளன. தடிமனைப் பொறுத்தவரை, ஐபோன் 5 எஸ் மாடலைக் காட்டிலும் குறைவாக இதில் அமைந்துள்ளது. இவற்றின் தடிமன் முறையே 6.9மிமீ மற்றும் 7.1 மிமீ ஆக உள்ளது. ஐபோன் 5 எஸ் தடிமன் 7.6 மிமீ ஆக உள்ளது.

இரண்டு போன்களிலும், புதிய ஆப்பிள் ஏ8 சிப் (64-bit Apple A8) பொருத்தப்பட்டுள்ளது. இது ஏ7 சிப்பினைக் காட்டிலும் 13% அளவில் குறைவானது. செயல் திறன் 25% அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பில் இணைக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் செயல்பாடு, முந்தைய சிப்பைக் காட்டிலும் 5-0% கூடுதல் வேகத்தில் செயல்படும். இந்த சிப் பயன்படுத்தும் மின் சக்தி 50% குறைவாக இருக்கும். எனவே பேட்டரியின் மின்சக்தி கூடுதலான நேரம் தங்கும்.

இரண்டு புதிய மாடல்களிலும், வயர்லெஸ் இணைப்பு, முந்தைய மாடல்களில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் செயல்படுகிறது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 150 Mbps LTE ஆக இருக்கும். முந்தைய மாடல்களில், இது 1-00 Mbps ஆக இருந்தது. இரண்டு மாடல்களிலும் வை பி இணைப்பைப் பயன்படுத்தி, போன் அழைப்புகளை ஏற்படுத்திப் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள என்.எப்.சி. சிப் மூலம், இந்த போன்களைப் பயன்படுத்தி, அசைவுகள் மூலம் நிதி பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். 
இந்த போன்களில், மேலாக உள்ள கண்ணாடி, ஓரங்களில் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் செறிவூட்டப்பட்ட அலுமினியத் தகடு அமைக்கப்பட்டுள்ளது. 

ஐபோன் 6 ப்ளஸ் பேப்லெட் ("phablet") எனவும் அழைக்கப்படுகிறது. போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கு இடையேயான ஒரு சாதனமாகக் கருதப்படுகிறது. 
இவற்றில் தரப்பட்டுள்ள கேமராக்களிலும் புதிய தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. 8 மெகா பிக்ஸெல் iSight கேமரா இணைக்கப்பட்டுள்ளது. ட்ரூ டோன் ப்ளாஷ் இயங்குகிறது. குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் போட்டோக்களும், துல்லியத்தைத் தரும் வகையில் வெளியாகின்றன. விடியோ காட்சிகள், வழக்கான நிலையில், நொடிக்கு 30 முதல் 60 பிரேம்களைப் பதிவு செய்கிறது. மெதுவாக இயங்கும் நிலையில் இயக்குகையில் (slow-motion video) இது நொடிக்கு 120 முதல் 240 பிரேம்களாக உள்ளது.

மேம்படுத்தப்பட்ட ரெடினா டிஸ்பிளே, கூடுதல் திறனுடன் 64 பிட் ஏ8 (A8) சிப், வை பி இணைப்பு, மொபைல் வாலட் இணைப்பு செயல்பாடு, வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் உடன் இணைந்த இயக்கம் ஆகியவை புதிய வசதிகள் ஆகும். செப்டம்பர் 17ல் வெளியிடப்பட இருக்கும் ஐ.ஓ.எஸ். 8 இயக்க முறைமை, ஐபோன் 4 எஸ் முதல் ஐபோன் 6 வரையிலான போன்களில் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது. 

இதனையும் புதிய மேம்படுத்தலாக ஏற்றுக் கொள்ளலாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget