கைபேசியை மற்றவர் தொட்டால் திரையை மூடும் புத்தம் புது மென்பொருள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த
செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் சென்போ மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள். இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.

100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது. பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.

விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget