கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீனாட்சி. கொல்கத்தா அழகியான இவருக்கு அப்படத்தை
தொடர்ந்து கோலிவுட்டில் பெரிய அளவில் படங்கள் இல்லை. தற்போது நந்தாவுடன் ‘வில்லங்கம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மீனாட்சி, விக்ரம் பிரபு நடிக்கும் ‘வெள்ளைக்காரத்துரை’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடுகிறார்.
இந்நிலையில், ‘ஆடுகளம்’ படத்திற்கு தனுஷ்-வெற்றிமாறன் இணையும் ‘சூதாடி’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக மீனாட்சி தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே, தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் லட்சுமி மேனன் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், இரண்டாவது நாயகியாக தேர்வாகியுள்ள மீனாட்சி, இந்த படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை கோலிவுட்டில் நிலைநிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜீ,வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பார்த்திபன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கிறது. அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அடுத்த வருடம் மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.