ஹாங்காங் அடிப்படை ஸ்மார்ட்போன் நிறுவனமான சன்ஸ்ட்ரைக் டெலிகாம், தற்போது தனது சமீபத்திய கிட்கேட் அடிப்படை கொண்ட ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு Celkon நிறுவனம் கேம்பஸ் A35K ஸ்மார்ட்போனை ரூ. 2,999 விலையில் அறிவித்ததைபோல ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனும் அதே விலையில் அறிவித்துள்ளது.
சமீபத்திய நுழைவு நிலை ஸ்மார்ட்போனான ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது மற்றும் 3 ஜி ஆதரவு வருகிறது. மற்ற விவரங்கள் 315ppi பிக்சல் அடர்த்தி மற்றும் QVGA 320x480 பிச்கல் தீர்மானம் கொண்ட 3.50 இன்ச் qHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த தொலைபேசியில் 119 x 62.4 x 11mm டைமன்ஷன், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு மைக்ரோ-USB போர்ட் காணப்படுகிறது. ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் ரேம் 256MB உடன் இணைந்து 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 7715 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் உள்ளக சேமிப்பு 512MB கொண்டுள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வருகிறது. மேலும் தொலைபேசியில் 3 ஜி, Wi-Fi, மைக்ரோ-USB போர்ட் மற்றும் ப்ளூடூத் 3.0 ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் 1600mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. நிறுவனம் கைபேசி உடன் இலவசமாக கிரிஸ்டல் கவர் தொகுப்பினை வழங்குகிறது.
சன்ஸ்ட்ரைக் ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
- 320x480 பிச்கல் தீர்மானம் கொண்ட 3.50 இன்ச் qHD டிஸ்ப்ளே,
- 315ppi பிக்சல் அடர்த்தி,
- ரேம் 256MB,
- 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 7715 ப்ராசசர்,
- 512MB உள்ளக சேமிப்பு,
- இரட்டை சிம்,
- மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு
- 1.3 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- 3 ஜி,
- Wi-Fi,
- மைக்ரோ-USB போர்ட்,
- ப்ளூடூத் 3.0,
- ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
- 1600mAh பேட்டரி.
கருத்துரையிடுக