மலையாள சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகை ஹென்னா பெல்லா. விடியும் வரை விண்மீன்களாவோம் படத்தின்
மூலம் தமிழுக்கு வருகிறார். பி.விஜய்குமார் என்ற புதுமுகம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் ஹென்னா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக நேகா நடிக்கிறார். "சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்கிறார்கள். வெட்டிக் கொள்கிறார்கள் என்று அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வரும். அந்த செய்தியின் பின்னணியை சொல்லுகிற படம். கல்லூரிக்குள் அரசியலையும், ஜாதியையும் கொண்டு சென்று ஒரு கூட்டம் தங்களை வளர்த்துக் கொண்டு வருகிறது. அவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிற படம். இதில் நான் கல்லூரி மாணவர் தலைவனாக நடிக்கிறேன். நான் காதலிக்கும் பெண்ணாக நேகாவும் என்னை காதலிக்கும் மாணவியாக ஹென்னாவும் நடிக்கிறார்கள்" என்கிறார் இயக்குனர் விஜய்குமார்.

கருத்துரையிடுக