குடும்ப பாதுகாப்பு சட்டம் பற்றி தெரியுமா

மத்திய அமைச்சகம் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை 2006-ல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி கணவனால்
துன்புறுத்தப்பட்ட பெண் மட்டுமல்லாது சகோதரி, விதவை, ஆதரவற்ற பெண் அல்லது கொடுமைப்படுத்துபவர்களுடன் ஒரேவீட்டில் வசிக்கும் பெண் ஆகிய எவரும் பாதுகாப்பு பெற முடியும். குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியான, 

மனோரீதியான, வார்த்தை ரீதியிலான, உணர்வு ரீதியிலான, பொருளாதார ரீதியிலான துன்புறத்தல் அல்லது அவ்வாறு அச்சுறுத்துவது ஆகியவை அடங்கும். இதில் வரதட்சணைக் கொடுமையும் அடங்கும். 

உறவுமுறை ஆண்களின் துன்புறுத்தல்களிலுருந்து பெண்களைப் பாதுகாக்கும் இச்சட்டத்தின் மூலம் வரதட்சணைக் கொடுமை, பொருளிழப்பு, மனஉளைச்சல் போன்ற கொடுமைகளில் இருந்து சட்டரீதியிலான பாதுகாப்பளிக்கிறது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் ரூ.20,000 வரை அபராதமும் ஒருவருடம் சிறைத் தண்டனையும் குற்றவாளிக்குக் கிடைக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி இந்தியாவில் திருமணமான பெண்களில் 70% பேர் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. 

பெண்களுக்கு சமஉரிமை வழங்கி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் அமெரிக்காவில்தான் பெண்களுக்கு எதிரான பலாத்காரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிபரம்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget