பெண்கள் பணியிடத்தில் முக்கியமானவை

பெண்களை பணியமர்த்துபவர் கீழ் கண்டவற்றை செய்ய வேண்டியது அவசியமானது மிகவும் முக்கியமானது. அவைகள் என்னவென்று
பார்க்கலாம். 

பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட விளக்கத்தை பணியிடத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

பாலியல் வன்முறையைத் தடுப்பதும், பாலியல் வன்முறைக்கான புகார்களைப் பரீசிலிப்பதற்கான நடைமுறைகளை ஏற்படுத்துவதும், பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கான நடவடிக்கை எடுப்பதும் ஒரு பணியமர்த்துநரின் கடமையாகும். 

பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண், தான் அந்த இடத்திலிருந்து பணிமாற்றம் செய்ய விரும்பினாலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ய விரும்பினாலோ, அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

ஒரு பெண்ணுக்கு சுமுகமான பணிச்சூழலை அமைத்துத் தருவது ஒரு பணியமர்த்துபவரின் கடமையும் பொறுப்புமாகும். 

பாதுக்காப்பான பணிச்சூழல் ஒவ்வொரு பணிபுரியும் பெண்ணுக்கும் உள்ள உரிமையாகும். 

பணிப்புரியும் பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். நிர்வாகம் நடத்தும் கூட்டங்களில் பெண் தங்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகள் குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும். 

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பணிச் சூழலோடு, அவர்களின் சுகாதாரம் மற்றும் நலனும் பேணப்படுதல் வேண்டும். இதையெல்லம் பணியமர்த்துபவர் கடைப்பிடிக்க வேண்டியவை ஆகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget