டென்ஷனை விரட்ட என்ன செய்யலாம்

டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா? அப்ப இதை படிங்க.. தவறு செய்வது மனித இயல்பு. எனவே,
உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.

போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு. 

ஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். 

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே,மறப்போம் மன்னிப்போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள். 

உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம். 

அப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். 

அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்க்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். 

இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக்கும். மனக்கசப்பு நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். 

இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget