சித்தார்த் - சமந்தா இருவரும், ஒரேயொரு தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே, அவர்களை இணைத்து, காதல்
செய்திகள் புகையத் துவங்கிவிட்டது.இருப்பினும், அந்த செய்திகளை இருவருமே, தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சமீபத்தில், சித்தார்த் நடித்த ஒரு படத்தின் ஆடியோ விழாவில், சமந்தா கலந்து கொண்டார்.அப்போது சித்தார்த் பற்றி, அவர் பேசும்போது, 'சித்தார்த், படத்திற்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். தன்னை, ஒரு கதை வெகுவாக பாதித்து விட்டால், அந்த படத்தில் எப்படியேனும் நடித்து விடுவார். அவரிடம், எப்போது பேசினாலும், சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவரது பேச்சு, மூச்சு எல்லாமே சினிமா தான். சித்தார்த்தை, ஒரு சினிமா பைத்தியம் என்று கூட சொல்லலாம்' என்கிறார் சமந்தா.

கருத்துரையிடுக