கோலிவுட்டின் அழகு தேவதைகள்

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு புதிய ஹீரோயின்களின் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது. புதிய அறிமுக அலையே அடித்துள்ளது என்றுகூட சொல்லலாம்.
அந்த அளவிற்கு புதிய இளம் நடிகைகள் தமிழ் சினிமாவில் வந்து இறங்கி உள்ளனர். ஆனால் அப்படி அறிமுகமானவர்களில் மிகப் பெரும்பாலோர் ஒரு படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகிக் சென்று விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் காலூன்றி நிற்கிறார்கள். அவர்களில் சில நம்பிக்கை நட்சதிரங்கள் பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

அகிலா கிஷோர் : பார்த்திபன் இயக்கிய, கதை திரைக் கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர். ஏற்கெனவே கன்னட படம் ஒன்றில் நடித்திருக்கிறார். பெங்களூர் சொந்த ஊர். தற்போது மூன்றாம் உலகப்போர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மோனல் கஜ்ஜார் : தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த மும்பை பொண்ணு. வானவராயன் வல்லவராயன் படத்தில் அறிமுகமானார். ஆனால் சிகரம் தொடு முந்திக்கொண்டு அதுவே முதல் படமானது. இரண்டு படங்களும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பதும், ஹன்சிகா சாயலில் இருப்பதாலும், கொஞ்சம் நடிக்கவும் தெரிந்திருப்பதாலும் தயாரிப்பாளர்களின் குட் சாய்சில் இருக்கிறார்.

ஷிவதா நாயர் : மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் நெடுஞ்சாலைதான் அவரை மலையாளத்துக்கும் சேர்த்து அடையாளம் காட்டியது. நெடுஞ்சாலை படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு படங்களில் ஒப்புக் கொள்ளாமல் நடித்த அந்த டெடிகேஷன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. தற்போது ஜீரோ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

மியா ஜார்ஜ் : 2012ம் ஆண்டு மிஸ்.கேரளா டைட்டிலுடன் தன் பயணத்தை தொடங்கியவர். மலையாளத்தில் 14 படங்களில் நடித்து முடித்திருக்கும் மியா ஜார்ஜின் முதல் தமிழ் படம் அமரகாவியம். படத்தை பற்றி இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தாலும் மியாவின் நடிப்பை பாராட்டாதவர்கள் இல்லை. தற்போது கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் மியா அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

சலோனி லுத்ரா : சரபம் படம் எப்படியோ, ஆனால் அதில் டபுள் ஆக்ஷனில் கலக்கிய சலோனியை லுத்ராவை யாராலும் மறக்க முடியாது. தம்மு, தண்ணி, போதை என ஹாலிவுட் ஹீரோயின்கள் 
ஸ்டைலில் நடித்து கலங்கடித்தார். அடிப்படையில் ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்டான சலோனி கதக் நடன கலைஞர். தமிழ் சினிமாவில் வில்லித்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு செம பிட் என்பது இண்டஸ்டரியில் பேச்சு.

இஷாரா : வெண்மேகம்தான் அறிமுகம் என்றாலும் சதுரங்க வேட்டையில்தான் கவனிக்க வைத்தார். இடையில் நடித்த பப்பாளியில் காமெடியும் செய்தார். சதுரங்க வேட்டையில் அவரது யதார்த்தமான நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. பெரிய கண்களாலேயே நடிப்பை கொட்டிவிடுவார். பப்பாளியின் கையில் இப்போது பப்பரப்பம், அதி மேதாவிகள் என இரண்டு படம் இருக்கிறது.

ராகுல் ப்ரீத்தி சிங் : அடிப்படையில் கோல்ப் விளையாட்டு வீராங்கணையான ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் பிசியான நடிகை. 2011ம் ஆண்டு மிஸ் இண்டியா போட்டியில் 4 பட்டங்களை வென்று அதன் மூலம் பட உலகுக்கு வந்தவர். தமிழில் என்னமோ ஏதோவில் அறிமுகம். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். என்னமோ ஏதோ கொஞ்சம் சறுக்கியதால் சின்ன தடுமாற்றம். அடுத்த படத்தில் விட்டதை பிடித்து விடுவார்.

மிருதுளா : வல்லினம் படத்தில் அறிமுகமானார். அந்த படம் தாமதமானதால் அடுத்து நடித்த மறுமுனை முதலில் ரிலீசானது. மறுமுனை அவருக்கு கைகொடுக்கவில்லை. வல்லினம் அடையாளம் காட்டியது. முறைப்படி நடனம் கற்ற பக்கா சென்னை பொண்ணு. தற்போது ஐஸ்கிரீம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனந்தி : தெலுங்கில் ரக்ஷிதா என்ற பெயரில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவருக்கு பொறியாளன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தத. அந்த படம் போலவே அவரும் கவனிக்கப்படவில்லை. பிரபு சாலமன் கண்ணில் பட்டு ஆனந்தியாக பெயர் மாறியிருக்கிறார். அவரது பெரிய கண்கள்தான் அவருக்க கயல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கயல் படம்தான் ஆனந்தியின் ஆனந்ததுக்கு காரணமாக இருக்கப்போகிறது. அதற்குள் இரண்டு படங்களில் கமிட் ஆகிவிட்டார்.

ஏமாற்றியவர்கள் : சில நடிகைகள் தங்களின் முதல் படத்தில் நிறைய நம்பிக்கைகளை கொடுத்துவிட்டு ஏமாற்றியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான மூன்று பேர்..

வாணி கபூர் : இந்தி நடிகையான வாணிகபூர் ஆஹா கல்யாணம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ் சினிமா மீது நிறைய எதி£ர்பார்ப்பு வைத்திருந்தார். ஆஹா கல்யாணம் படத்திலும் பிரமாதமாக நடித்திருந்தார். ஆனால் படம் வெற்றி பெறாதாதால் அவருக்கு அடுத்த தமிழ் படம் கிடைக்கவில்லை. மீண்டும் இந்திக்கே சென்று விட்டார்.

லாவண்யா திரிபேதி : பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். பெரிய ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டார். ஆனால் பிரம்மன் தோல்வியால் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சுரபி : இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான அழகு தேவதை. படமும் சுமாராக போனது. ஆனாலும் ஏனோ அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். தற்போது ஜீவா படத்திலும் சிறிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மாளவிகா மேனன் : குக்கூ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரும் பாராட்டை குவித்தவர் மாளவிகா மேனன். அடுத்த ரேவதி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார். ஆனால் நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்று ஒரே படத்தோடு சினிமாவை விட்டு விலகி படிக்கச் சென்று விட்டார்.

தற்போதுள்ள ஹீரோயின்களை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒன்று நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, சமந்தா, த்ரிஷா. காஜல் என கோடியை நெருங்கியும், தாண்டியும் சம்பளம் வாங்கும் நடிகைகள், அடுத்து லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா மாதிரி மீடியமான சம்பளம் பெறும் நடிகைகள். அடுத்து மேலே குறிப்பிட்டிருக்கும் அறிமுக நடிகைகள். இது இன்றைய நிலைதான். நாளை இந்த நிலையில் மாற்றம் நிச்சயம் வரும். வந்திருக்கும் புதிய அலை. பழைய சாதனைகளை தாண்டுமா என்பதை காலம் தீர்மானிக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget