ஆப்பிள் வாட்ச் புத்தம் புது தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த ஆப்பிள் வாட்ச் (Apple Watch)
சாதனத்தை அறிமுகப்படுத்தினார். தன் பயன்பாட்டு சாதனங்களில், இதுவரை ஆப்பிள் நிறுவனம் இது போன்றதொரு சாதனத்தைத் தந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தில் உருவானது என்று குறிப்பிட்டார். கடிகாரம் ஒன்றில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று மக்கள் எண்ணக் கூடியதைக் காட்டிலும், முற்றிலும் புதிய வசதிகளுடனும் செயல்பாடுகளுடனும் இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் இதே போன்ற சாதனத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னாலேயே, ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கோ சென்றுவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.

ஐபாட், ஐபோன் மற்றும் ஐபேட் எப்படி முற்றிலும் புதிய வசதிகளை எதிர்பாராத வகையில் தந்தனவோ, அதே போல முற்றிலும் புதிய கோணத்தில் இதன் செயல்பாட்டினைக் காணலாம்.

ஆப்பிள் வாட்ச் ஒன்றின் விலை 349 டாலர் எனத் தொடங்குகிறது. மூன்று வகையான ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டு விலைக்குக் கிடைக்கிறது. இதன் ஆளுமை வரும் 2015 ஆம் ஆண்டில் முழுமையாகத் தெரிய வரும். நிச்சயம் அணிந்து இயக்கப்படும் கம்ப்யூட்டர் சந்தையில், ஆப்பிள் வாட்ச் முதல் இடத்தை மட்டுமின்றி, வேறு எந்த சாதனமும் இதன் வசதிகளுக்கு அருகே வராத நிலையும் ஏற்படும் என்று பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில், இதே போல எம்.பி. 3 பாடலை வழங்குவதில் தன்னிகரற்ற சாதனமாக ஐபாட் அறிமுகமானது. விற்பனைச் சந்தையில் ராஜாவாகப் பல ஆண்டுகள் வீற்றிருந்தது. 2007ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எனப்படும் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. புதிய தரத்தையும் வசதிகளையும் நிலை நிறுத்தியது. 

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள், அணிந்து இயக்கும் கம்ப்யூட்டிங் சாதனங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். அல்லது உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், ஆப்பிள் ஏற்கனவே தன் சாதனங்கள் பெற்ற வெற்றியின் புகழ் நிழலில், ஆப்பிள் வாட்ச் இயங்கும் என நம்பி, இந்த சந்தையில் இறங்கியுள்ளது.
தற்போது விற்பனையில் வர இருக்கும் ஆப்பிள் வாட்ச், அதனை அணிபவரின் உடல்நிலையினைக் காட்டும் சாதனமாக புதிய முறையில் உருவெடுக்கும். மொபைல் வழி பணம் செலுத்துவதனைக் கண்காணிக்கும். மற்றும் பிற புதிய நவீன வசதிகளை அளிக்கும். இரண்டு வகையான அளவுகளில் இது வடிவமைக்கப்பட்டு நமக்கு இது கிடைக்கும். மூன்று வகையான வடிவமைப்பில் இவை உருவாக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த மாடலைத் தேர்ந்தெடுக்க இது வசதியாக இருக்கும். 
இதன் மேலாக உள்ள கண்ணாடி கவர் சபையர் கிறிஸ்டல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் ஸ்கிராட்ச் எனப்படும் கீறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. உள்ளே இருக்கும் டிஸ்பிளே ரெடினா வகையைச் சார்ந்தது. தட்டுவது மற்றும் தொடர்ந்து அழுத்துவது ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இந்த திரை புரிந்து கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Force Touch என்னும் டூல் இதனை மேற்கொள்கிறது. எனவே, திரை அழுத்தத்திற்கு தனித்தனியே சாதனங்கள் தேவைப்படாது. 

இதனை மணிக்கட்டில் அணிந்து கொண்டு, ஒவ்வொரு முறை மணிக்கட்டினை உயர்த்தும் போதும், வாட்ச் செயல்பாடு காட்டப்படும். 
இதன் மூலம் மெசேஜ் பெறுகையில், அதில் உள்ள சொற்களின் பொருள் மற்றும் தன்மையினை இந்த வாட்ச் புரிந்து கொண்டு பதிலையும் தயார் செய்கிறது. 

அதனால், அதிகம் டைப் செய்து பதில் தயார் செய்திட வேண்டியதிருக்காது. இந்த வாட்ச் செயல்பாட்டிற்கான சிறிய அப்ளிகேஷன்களைத் தயார் செய்வதற்கு, ஆப்பிள் நிறுவனம் தன் டெவலப்பர்களுக்கு WatchKit ஒன்றை வழங்குகிறது.

இந்த வாட்ச் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்த ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி, இதற்கான காத்திருப்பு அவசியம் தான் என வாட்ச் வரும்போது மக்கள் உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget