அம்மா வேடமா - குஷ்பு

நடிகை குஷ்பு டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட கேள்விகளுக்கு
சரமாரியாக பதில் அளித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு...

அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பாக இல்லை.

அஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா?

இப்போதைக்கு இல்லை.

பொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள்? இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் கடினமானது எது?

மனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க வேண்டும்.

நீங்கள் ஓரின சேர்க்கையாளருக்கும், ஆதரவு தெரிவிப்பீர்களா? 

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது.

இதயப்பூர்வமான மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.

நீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப் போன படம் எது?

தெலுங்கு சின்னத்தம்பி (சண்டி)

சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.

இந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள்? 

ஹிருத்திக் ரோஷன்.

இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்? 

தமிழில் கமல், இந்தியில் அமீர்கான்

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

ஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்

உங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா?

முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.

யார் முதலில் காதலை சொன்னது நீங்களா ? இல்லை சுந்தர்.சி யா?

அவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.

அரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்?

ஐடியா இல்லை..

உங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து?

வெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget