சற்றே சர்ச்சைகளும் கருத்து மோதல்களும் உண்டாகும் பதிவு தான்.. என்றாலும் மக்களின் அறியாமையை விரட்டவே இந்த பதிவு..
குழந்தையானது கருவறையில் வந்து தங்குவதற்கு ஏற்றவாறு பெண்ணின் கருப்பையை இயற்கை ஆயத்தப்படுத்தும் நிகழ்வைத்தான் மருத்துவ அறிவியல் மாதவிலக்கு என்கிறது. மாதந்தோறும் நிகழும் இந்த நிகழ்வு , ஒரு குறிப்பிட்ட வயதில் தோன்றி, இன்னொரு குறிப்பிட்ட வயதில் மறைந்து போகும் . மனித இனப்பெருக்கம் நிகழ்வதற்கு இது தான் முக்கியமானதே
பெண் எவ்வளவுதான் சிறந்து விளங்கினாலும் மாதவிலக்கு நாட்களில் கோயிலுக்குள் செல்லக் கூடாது , பூஜையறைப் பக்கம் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் இருக்கிறது. . சிலரை மொட்டை மடியில் தனியாக விடுவதையும் நேராக பார்த்திருக்கிறேன். வீட்டிலுள்ள பொருட்களைத் தொடக் கூடாது. குறிப்பாக அரிசி, பருப்பு முதலிய சமையல் பொருட்களைத் தொடக் கூடாது; சமைக்கக் கூடாது; வீட்டை விட்டு வெளியே போகாமல் மூலையிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் சில இடங்களில் கட்டுப்பாடு இருக்கிறது
தினம் தினம் வீட்டை சுத்தப்படுத்துவது போன்றது தான் பெண்ணிற்கு நிகழும் அந்த நிகழ்வும்..கருவை சுமக்க ஏற்றார் போல் பெண்ணை தயார்படுத்தும் சாதாரண பெருமைமிக்க நிகழ்வு தான் அது.நமது உடம்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் அசுத்தம் தான்..அதே போன்றது தான் இந்த நிகழ்வும் கருமுட்டைகளும் , கழிவுரத்தமும் வெளியேறுவது..
பண்டைய இந்து மத நூல்களிலும் இந்த நாட்களில் இறைவனை வழிபடக்கூடாது என்று எந்த கூற்றும் இல்லை.மாறாக திருமூலர் , சிவவாக்கியர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் பெண்களை இந்த நாட்களில் ஒதுக்கி வைப்பது தவறு என்றே கூறி இருக்கின்றனர்.நாம் அனைவரும் அவரவர் அன்னையரின் மாதவிலக்கில் இருந்து வந்தவரே. இது தீட்டு என்றால், அதிலிருந்து உருவாகிய நாமும் தீட்டுடையவர் தான்.
கோயில்களில் உள்ள பெண் தெய்வங்களுக்கு சக்தியுடையவை என்றால் அவற்றிற்கு உயிர் இருக்க வேண்டும். உயிருள்ள எந்தப் பெண்ணுக்கும் மாதவிலக்கு தவிர வந்தே தீரும். இந்த பெண் தெய்வங்களுக்கு மாதவிலக்கு வருமா என்று எந்த வேதங்களிலும் சொல்லப்படவில்லை. அப்படியெனில் 3-7 நாட்களாவது அந்த சாமி சிலைகளை கோவிலுக்கு வெளியில் வைக்க வேண்டும். சிலைகளுக்கு எப்படி மாதவிலக்கு வரும் என்று கேள்விகேட்டால் , அதே கேள்வியை கற்சிலைகளால் எப்படி மனிதனுக்கு நன்மை செய்ய முடியும் என்றும் கேட்கட்டும்.
முரண்பாடுகள் அதிகம் குடி இருப்பது தானே இந்து மதம்..கோவில்களின் புனிதத்தன்மை கெட்டுபோகிறது என்று கூச்சலிடுவது மதகுருமார்கள்தான், பக்தர்கள் அல்ல..
பெருமாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் மார்கழி மாதத்தின் 30 நாளும் சாமி கும்பிடத்தான் செய்தாள்.30 நாளுக்கும் நாள் ஒன்று விதம் ஒரு பாட்டு இருக்கிறது..
இஸ்லாம் மதம் கூட மாதவிலக்கை தீட்டு என்று கூறவேயில்லை..நோன்பு காலங்களில் அந்த நாட்களில் மட்டும் விலக்கு எடுத்துகொண்டு தொடர்ந்து நோன்பிருக்கலாம் என்றே இருக்கிறது..
மாதவிலக்காக இருக்கும் பெண்கள் கோயிலுக்குள் சென்றால் ஆகமம் கெட்டுவிடும் என்று கூறுபவர்கள்..பொய்யுரைப்பவர் , ஏமாற்றுபவர் , திருடன், கொள்ளை லாபம் ஈட்டுகிறவன், லஞ்சத்தில் திளைப்பவர் , ஊழல்வாதி , கலப்படம் செய்கிறவன், பதுக்குகிறவன் என அனைவரும் ஆலயத்துள் செல்லும்போது குறையாத ஆகமம் மாதவிலக்காக இருக்கும் பெண்கள் பூஜிப்பதால் குறையுமா என்ன ??
பெண்கள் தான் இவ்வுலகத்தில் இருப்பதில் மிகப்பெரிய பலமுள்ள ஆற்றலுள்ள செல்வம்..

கருத்துரையிடுக