புதிய கெட்டப்பில் பார்வதி

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்பட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி. தற்போது கமலுடன் உத்தம வில்லன்
படத்தில் நடித்து வருகிறார். பார்வதி, மலையாள நடிகைகளில் மிகவும் போல்டானவர். தனக்கு பிடிக்காத கேரக்டர் எதுவாக இருந்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்காதவர். அவர் தற்போது தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். முடியை குட்டையாக வெட்டி புதிதாக மூக்கு கண்ணாடியும் அணிந்திருக்கிறார். இது எந்த படத்திற்குமான கெட்அப் இல்லையாம். அவருடைய ஒரிஜினல் தோற்றமாம். 

இதுகுறித்து பார்வதி கூறியிருப்பதாவது: படத்துக்கு படம் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்து போரடித்துவிட்டது. நீளமான கூந்தலும், அதன் பராமரிப்பும் என் சுதந்திரத்தை பறிப்பதாக நினைத்தேன். அதுதான் குட்டையா வெட்டிவிட்டேன். கண்ணில் எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும் கண்ணாடி அணிவது பிடிக்கும் என்பதால் ஜீரோ பவர் கண்ணாடி அணிந்திருக்கிறேன்.

மலையாளத்தில் காஞ்சனமாலா என்ற நிஜ பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறேன். இதற்காக அவரை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக மலையாளத்தில் நடிக்கவில்லை. காரணம் எனக்கு ஏற்ற கேரக்டர்கள் அமையவில்லை. தற்போது என்னு நின்ட மொய்தீன் படத்தில் பிருத்விராஜுடன் நடித்து வருகிறேன் என்கிறார் பார்வதி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget