இசையமைப்பாளர் ஆகும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்ற இரண்டு முகம் காட்டி வந்த ஆண்ட்ரியாவுக்கு மனதளவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையும்
நீண்டகாலமாக உள்ளதாம். அதனால்தான், அனிருத் மாதிரியான இசையமைப்பாளர்களுடன் நட்பு வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாராம் ஆண்ட்ரியா. ஆனால் அதையடுத்து அவர்களது நட்பு ஏடாகூடாமான சங்கதி நாடறிந்ததே.

ஆனபோதும், இசையமைப்பாளராகியே தீருவது என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருந்த ஆண்ட்ரியா, அவ்வப்போது தன் மனசுக்கு தோன்றும் டியூன்களை தனது செல்போனிலேயே பதிவு செய்து வந்திருக்கிறார். கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்து வந்தபோது, அந்த ஸ்பாட்டில் அவ்வப்போது தனியே அமர்ந்து டியூன்களை ரெக்கார்ட் செய்ததை பார்த்த கமல், அவற்றை கேட்டு பார்த்து ஆண்ட்ரியாவை தட்டிக்கொடுத்திருக்கிறார்.

அதனால் அதையடுத்து, இன்னும் உற்சாகமடைந்த ஆண்ட்ரியா, தற்போது தான் நாயகியாக நடித்து வரும் தரமணி படத்தில் ஒரு பாடலை எழுதி கம்போஸ் செய்து தானே பாடியும் நடித்திருக்கிறார். ராம் இயக்கியுள்ள அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை என்றாலும், ஆண்ட்ரியாவின் ஆர்வத்துக்கு வழி விட்டுள்ளார். அதனால் ஆங்கிலத்தில் பதிவான அந்த பாடலை தனது படத்தின் ப்ரமோவுக்காக இணைத்துள்ளார் ராம்.

ஷோல் ஆப் தரமணி -என்ற அந்த பாடலைகூட கமல்தான் வெளியிட்டார். இதையடுத்து, வெகுவிரைவிலேயே மியூசிக் டைரக்டராகி விட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து வரும ஆண்ட்ரியா, தான் கம்போஸ் செய்து பின்னணி இசையுடன் பாடி வைத்திருக்கும் சில டியூன் கேசட்டுகளை முன்னணி இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வந்தார். அதை கேட்டவர்களில் கெளதம்மேனனுக்கு ஆண்ட்ரியாவின் பாடல்கள் அதிகம் பிடித்து விட்டதாம் அதனால் முழு இசையமைப்பாளராக அவரை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget