பாலிவுட்டை கலக்கும் சிங் சாங் அவதாரம்

நடிப்பில் இருந்து தயாரிப்பு, தயாரிப்பில் இருந்து இயக்கம், இசை அமைப்பிற்கு சென்ற பாலிவுட் நடிகர், நடிகைகள் தற்போது தாங்கள் நடிக்கும்
படங்களில் அவர்களே பாடவும் துவங்கி உள்ளனர். சாதாரண நடிகர்கள் துவங்கி முன்னணியில் இருக்கும் நடிகர்களும் தங்கள் படங்களில் தாங்களே இசையமைத்து, தாங்களே பாடியும் வருவதால் பாலிவுட் இசையமைப்பாளர்களும், பாடகர்களும் கலங்கி போய் உள்ளனர். அவ்வாறு நடிகர்களாக பாலிவுட்டிற்குள் அறிமுகமாகி பாடகர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

பிரியங்கா சோப்ரா : பாலிவுட்டின் அழகான, கவர்ச்சியான ஹீரோயின் என பெயர் வாங்கி உள்ள பிரியங்கா சோப்ரா நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள படம் மேரி கோம். தடகள வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை சொல்லும் இந்த படத்தில் மேரி கோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தில் இன் மை சிட்டி... என்ற பாடலை அவரே பாடி, நடித்துள்ளார்.

சல்மான் கான் : ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுள்ள சல்மான் கான், சமீபத்தில் தனது குரலை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு, கிக் படத்தில் ஹேங்ஓவர்... என்ற பாடலை பாடி உள்ளார். படம் ரிலீசாவதற்கு முன்பே டிவி சேனல்களிலும், ரோடியோக்களிலும் டாப் இடத்தை பிடித்தது இந்த பாடல். இதற்கு முன் தான் நடித்த பாடிகாட் படத்தில், டைட்டில் பாடலில் சில வரிகளை சொந்த குரலில் பாடி உள்ளார் சல்மான்.

அக்ஷை குமார் : சொந்த குரலில் பாடி வரும் நடிகர்கள் பட்டியலில் சமீபமாக சேர்ந்துள்ளவர் அக்ஷை குமார். இவர் தான் நடித்த என்டர்டைன்மென்ட் படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். இருப்பினும் சல்மானின் ஹேங்ஓவர் பாடலுடன் ஒப்பிடுகையில், அக்ஷை குமாரின் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதற்கு முன் சல்மானும், அக்ஷையும் இணைந்து ஸ்பெஷல் 26 படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளனர்.

ஷார்தா கபூர் : பாடல் பாடுவதில் அதிக நாட்டம் கொண்டவர் ஷார்தா கபூர். பாடுவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் அவர் தவற விடுவதே இல்லை. இவரின் சமீபத்திய படமான ஏக் வில்லன் படத்தில் தனக்காக தேரி கல்லியன் என்ற பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் பெரிய அளவில் பெயர் வாங்கித் தரவில்லை.

ஆலியா பட் : ஷார்தா பட்டை போன்று சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பெயர் வாங்கி டாப் இடத்திற்கு வந்தவர்களில் ஒருவர் தான் ஆலியா பட். இவர் ஹம்டி ஷர்மா கி துல்கனியா என்ற படத்திற்காக மைன் டினு சம்ஜ்ஹாவன் கி என்ற பாடலை பாடினார். படம் வெற்றி போதும், பாடல் வெற்றி பெறவில்லை. இதற்கு முன் ஹைவே படத்தில் சோஹா சகா என்ற பாடலையம் ஆலியா பட் பாடி உள்ளார்.

தபு : நடிகை தபுவும் தற்போது தான் நடித்து வெளிவர இருக்கும் ஹைடர் படத்திற்காக ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த படம் அக்டோபரில் ரிலீசாக உள்ளது. இதில் மற்றவர்களைப் போல் ரோமான்டிக் பாடலை பாடாமல், குத்து பாட்டு பாடியுள்ளார் தபு. ஷார்தா கபூருடன் தபு ஆடுவது போன்ற காஷ்மீர் மாநில பாரம்பரிய பாடல் போன்று பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் : 2000ம் ஆண்டு வெளியான ஜோஷி படத்தில் இடம்பெற்ற அபுன் போலா து மேரி லைலா என்ற பாடலை ஷாருக்கான் பாடி உள்ளார். அதன் பிறகு சுமார் 14 வருடங்களுக்கு பின் தற்போது அவர் நடித்த ஹேப்பி நியூ இயர் படத்தில் ஒரு பாடலை ஷாருக்கான் பாடி உள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா : சோனாக்ஷி சின்ஹாவும் விரைவில் ஒரு பாடல் பாட உள்ளார். அவர் நடிக்க உள்ள திவார் படத்தில் தான் இந்த பாடல் இடம்பெற உள்ளது. இதில் சோனாக்ஷி மட்டுமல்ல பஞ்சாபி பாடகர் இம்ரான் கானும் பாட உள்ளது தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்.
இவர்கள் மட்டுமல்ல குலாம் மற்றும் தேரே ஜமீன் பி படங்களில் அமீர் கானும், போல் பச்சன் படத்தில் அஜய் தேவ்கனும், ஜிந்திகி நா மிலிகி தோபரா படத்தில் ஹிருத்திக் ரோஷனும், ப்ளூஃப்மாஸ்டர் மற்றும் போல் பச்சன் படங்களில் அபிஷேக் பச்சனும், விக்கி டோனார் மற்றும் நவ்டன்கி சாலா படங்களில் ஆயுஷ்மான் குரானாவும் பாடி உள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget