கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்த ஹன்சிகா, சிம்புவை காதலிப்பதாக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிறகு, அவருக்கான படவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. ஏற்கனவே அவர் பேசிக்கொண்டிருந்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஹன்சிகா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேறு கதாநாயகிகள் ஒப்பந்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகா இந்த காதல் தனது சினிமா மார்க்கெட்டையே காலி பண்ணி விடும் போலிருக்கே என்று யோசித்து உடனடியாக சிம்புவை விட்டு விலகினார். அதையும் வெளிப்படையாகவே அறிவித்தார். அதோடு தன்னை விட்டு விலகிச்சென்ற சில ஹீரோக்களை நேரடியாக சந்தித்து சமாதானம செய்தார்.
விளைவு, இப்போது மறுபடியும் ஹன்சிகாவின் சினிமா மார்க்கெட் எகிறிக்கொண்டிருக்கிறது. அரண்மனைக்கு பிறகு மீகாமன், ரோமியோ ஜூலியட், இதயம் முரளி, ஆம்பள என அரை டஜன் படங்களில் நடிக்கும் ஹன்சிகா, அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கிலும் பவர் படத்தில் நடித்தவர், அடுத்தபடியாக 2 படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ஹன்சிகாவுக்கு முன்பு பீல்டில் நடித்துக்கொண்டிருந்த அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளின் மார்க்கெட்டும் தற்போது ஆட்டம் கண்டிருப்பதால், ஸ்டெடியாகி விட்டார் ஹன்சிகா. இந்த நேரத்தில் எந்த காரணம் கொண்டும் கால்சீட் பிரச்சினையில் சிக்கி விடக்கூடாது என்று உஷாராகி விட்ட ஹன்சிகா, எந்த படமாக இருந்தாலும் குறித்த நாளில் குறித்த நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜராகி விடுகிறாராம். இதனால் தற்போது இயக்குனர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் மெச்சும் நடிகையாகிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
கருத்துரையிடுக