லட்சுமியின் வாய்பை பறித்த திவ்யா

ராசியான நடிகை என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர்.
ஆரம்பத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தவர், பின்னர் சித்தார்த், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டார்.

இருப்பினும், தற்போது லட்சுமிமேனனுக்கான பட எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருக்கிறது. கடல் கெளதமுடன் அவர் ஏற்கனவே நடித்து வந்த சிப்பாய் படம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில், தற்போது கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து விஷால் நடிக்கும் படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.

ஆனால், இந்த நேரத்தில் லட்சுமிமேனனின் கைவசம் மேலும் இரண்டு படங்கள் இருந்திருக்க வேண்டுமாம். ஆனால், அந்த படங்களை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகியான ஸ்ரீதிவ்யாதான் தட்டிப்பறித்து விட்டாராம். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில் தற்போது ஜீவா வெளியாகியிருக்கும் நிலையில, டாணா, ஈட்டி, பென்சில், வெள்ளைக்காரதுரை என பல படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் அடுத்தடுத்தும் தனக்கான படங்களை ஸ்ரீதிவ்யா தட்டிப்பறித்து விடுவாரோ என்று உள்ளூர அதிர்ச்சியில இருக்கிறார் லட்சுமிமேனன். இந்த நிலையில், ஸ்ரீதிவ்யா கிளாமர் ஏரியாவையும் கவர் பண்ணி வருவதால், நான் சிகப்பு மனிதன் படத்தில் முத்தக்காட்சியில் நடித்த லட்சுமிமேன்ன, இனிமேல் கமிட்டாகும் படங்களில் கிளாமராகவும் நடித்து மார்க்கெட்டில் தன்னை தக்க வைத்துக்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget