சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் 2012–ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
கடைசியாக பிரகாஷ்ராஜூடன் நடித்த ‘என் சமையல் அறையில்’ என்ற படம் வந்தது.
சினேகா தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. விரைவில் குழந்தையை அவர் பெற்றெடுக்க போவதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து சினேகாவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:–
நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி பற்றி கேள்விப்பட்டேன். அது உண்மை அல்ல. பல வருடங்கள் சினிமாவில் பிசியாக நடித்தேன். இப்போது, என் ஓய்வை வீட்டில் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். நானும், பிரசன்னாவும் பெற்றோராக மாற இன்னும் தயாராக வில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும். அந்த படத்தில் நான்தான் நாயகியாக நடிக்கிறேன். நல்ல கதை.
நானும், பிரசன்னாவும் தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனாலும், படங்கள் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. நிறைய கதைகள் கேட்டு, நான்கு கதைகள் தேர்வு செய்துள்ளோம். அதில் ஒன்றை விரைவில் படமாக எடுப்போம். நாங்கள் தயாரிக்கும் படத்தில் பிரசன்னா நடிப்பாரா என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாது.

கருத்துரையிடுக