இன்டெக்ஸ்சின் புத்தம் புதிய டேட்டா கார்ட்

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அண்மையில் இரண்டு 3ஜி வயர்லெஸ் டேட்டா கார்ட்களை விற்பனைக்கு அறிமுகப்
படுத்தியுள்ளது. இவற்றின் தரவிறக்க வேகம் 21.6Mbps மற்றும் 14.4Mbps ஆக உள்ளது. இதனை டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இணைத்து இணைய இணைப்பு பெற வேண்டியதில்லை. இவற்றுடன் தரப்படும் இலவச பவர் அடாப்டரில் இணைத்து, மின் இணைப்பு கொடுத்தவுடன், நமக்கு வயர் இணைப்பு இல்லாமல் இணைய இணைப்பு கிடைக்கிறது. இது 3ஜி வை பி இணைய இணைப்பாகும். ஒரு கார்ட் பயன்படுத்தி, எட்டு சாதனங்களுக்கு இணைய இணைப்பினைப் பெறலாம். இது செயல்படுவதற்கு எந்த ட்ரைவர் புரோகிராமினையும் கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டுவதில்லை. இதில் சிம் கார்ட் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் சிஸ்டம், மேக் ஓ.எஸ். எக்ஸ் ஆகியவற்றில் இயங்குகிறது. 

“அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைக்க வேண்டும்” என்ற உயரிய இலக்குடன் இந்த இரண்டு வயர்லெஸ் 3ஜி டேட்டா கார்ட்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுவதாக, இன்டெக்ஸ் நிறுவன வர்த்தகப் பிரிவின் தலைவர் மார்க்கண்டேய தெரிவித்தார். இவற்றின் விலை ரூ. 2,700 மற்றும் ரூ. 2,530 ஆக உள்ளது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget