சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து, கடந்த சில வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம்
வந்தவர் சந்தானம். கடந்த வருடங்களில் கமலைத் தவிர்த்த மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட சந்தானம், விரைவில் கமலுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். காமெடியனாக உச்சத்தைத் தொட்டுவிட்டவர்களின் அடுத்த இலக்கு ஹீரோவாக நடிப்பதுதான். இதற்கும் சந்தானமும் விதிவிலக்கில்லை என்று சொல்வதுபோல், கடந்த வருடம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் வசூல் ரீதியாக அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது ஹீரோவாக தனது இரண்டாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். இன்னும் பெயரிடப்படாத இப் படத்தை சந்தானத்தின் நண்பரான சேது என்பவர் இயக்கி வருகிறார். சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஆஸ்னா ஜாவேரியே இப்படத்திலும் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். ரொமான்ஸ் கலந்த காமெடித் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது சந்தானம் ஏற்கெனவே காமெடியனாக நடித்து முடித்த படங்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது லிங்கா படத்தில் ரஜினியுடனும், நண்பேன்டா படத்தில் உதயநிதியுடனும், ராஜேஷ் எம். இயக்கத்தில் ஒரு படத்திலும் மட்டுமே காமெடியனாக நடிக்கிறார். இனி அவர் ஹீரோவாகவே மட்டுமே நடிப்பார் என்று சொல்கிறார்கள் சந்தானத்தின் நட்பு வட்டாரத்தினர்.. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் சூர்யா முன்னிலையில் பேசும் போது அண்ணனுக்கு முன்னாடி நான் என்னைக்குமே காமெடியன் தான் என்று பேசினார் சந்தானம்.
அவரது பேச்சை வைத்து பார்த்தால் இனி அவர் காமெடியனாக நடிப்பார் என்று தோன்றுகிறது.

கருத்துரையிடுக