விண்டோஸ் 10 ஸ்டார்ட் ஸ்கிரீன்

விண்டோஸ் 10 சிஸ்டம் டெக்னிகல் பிரிவியூ தொகுப்பினைப் பலரும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பலர் தொலைபேசி
வழியாகவும், அஞ்சல் வழியாகவும் தங்கள் சந்தேகங்களை தெரிவித்து விடை பெற்று வருகின்றனர். ஒருவர் தனக்கு விண்டோஸ் 8 தந்த ஸ்டார்ட் ஸ்கிரீனே அதிக வசதியுடன் இருப்பதாகவும், அதனை மட்டுமே வைத்துக் கொண்டு இயக்க விரும்புவதாகவும் தெரிவித்து அதற்கான வழி கேட்டுள்ளார். இன்னும் பலருக்கு இதே ஆவல் இருக்கலாம். அதற்கான வழி இதோ.

1. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

2. அடுத்து ஸ்டார்ட் மெனு டேப்பிற்குச் செல்லவும்.

3. இங்கு “Use Start Screen instead of Start Menu” என்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். 

4. தொடர்ந்து வெளியேறி (Sign out) மீண்டும் Sign in செய்திடவும். 
இப்போது உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனுடன் கம்ப்யூட்டர் தொடங்குவதனைப் பார்க்கலாம். 

இன்னும் மைக்ரோசாப்ட் பல விஷயங்களை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் முழுமைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பொறுமையாக இதன் குறைகளை, அவை எந்த தன்மை கொண்டவையாக இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பின்னூட்டு தளத்தில் தெரிவிக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget