வழக்கத்திற்கு மாறாக, ஆப்பிள், தன் மொபைல் போனின் திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சற்றுப் பெரிய திரையைத் தந்துள்ளது. முறையே
4.7 மற்றும் 5.5 அங்குல அளவில் இவை உள்ளன. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஸ்கைப் புரோகிராமினை, இந்த போன்களின் திரைக்கேற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த வசதிக்கான புரோகிராம் மேம்பாடு சென்ற வாரம் தரப்பட்டது. இதன் மூலம், ஏற்கனவே நாம் தொடர்பு கொண்டவர்களின் பட்டியல் சரியாகவும் அதிகமாகவும் கிடைக்கிறது. இந்த பட்டியலைப் பயன்படுத்தி, நாம் நம் நண்பர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலும்.
மேலும் சில சின்னச் சின்ன வசதிகளும் தரப்பட்டுள்ளன. போன் "Do Not Disturb" என்ற நிலையில் இருக்கையில், நோட்டிபிகேஷன் குறித்த ஒலி கிடைக்காது. ஒருவர் பெயரில் உள்ள உரையாடல்களை, நாம் படித்துவிட்டோமா இல்லையா என்பதனைக் குறித்துவைக்கலாம். ஒருவரின் தொடர்பு எண்ணை, அதனைக் கொண்டுள்ளவர் வாழும் நாட்டின் நேரத்துடன் அறிந்து கொள்ளலாம். "recent" என்ற பட்டியிலில் இருந்து, குறிப்பிட்ட ஒருவர் இணையத் தொடர்பில் உள்ளாரா என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.
ஐபோனுக்கான இந்த புதிய, மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் தொகுப்பினை இந்த முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக