வைர மங்கையான தமன்னா

தற்போது சூரத்தில் முகாமிட்டு நவராத்திரியை கொண்டாடி வரும் தமன்னா, வண்ணமயமாக டாடியா நடனமும் ஆடி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தனது அன்றாட நடவடிக்கைகளை டுவிட் செய்வதிலும் ஏகத்துக்கும் பிஸியாக இருந்து வருகிறார் தமன்னா.சமீபத்தில் அழகான வைர தோடு அணிந்த தனது போட்டோவை டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் தமன்னா, இது நான் புதிதாக வடிவமைத்திருக்கும் தோடு. சூரத்தில் டாடியா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நான், தனியாக பளிச்சிட வேண்டும் என்பதற்காக இந்த தோடை வடிவமைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். அடுத்த நாள் மிக பிரம்மாண்டமான தோடு மற்றும் நெக்லஸ் அணிந்த தனது போட்டோவையும் தமன்னா பதிவு செய்துள்ளார்.

தமன்னாவின் அப்பா நகை செய்யும் பட்டறை வைத்துள்ளாராம். இங்கிருந்து தான் தமன்னா நகை வடிவமைக்கும் திறனை வளர்த்துக் கொண்டாராம். தானே வடிவமைத்த நகைகளை விற்பனை செய்வதற்காக நகைக்கடை ஒன்றையும் தமன்னா விரைவில் திறக்க உள்ளாராம். இதற்கான பணிகளில் தமன்னா இறங்கி உள்ளாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget