‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. சுசி கணேசன் இப்படத்தை இயக்கியிருந்தார். மெட்ராஸ் டாக்கிஸ்
நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி சிறப்பாக ஓடியது. இப்படத்தையடுத்து மாதவனுடன் ஜோடி சேர்ந்து ‘எதிரி’ படத்தில் நடித்தார். பிறகு ஆட்டோகிராப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.
தமிழை தவிர பிற மொழி படங்களிலும் நடித்த வந்த கனிகா, கடைசியாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளப்படங்களில் பிசியாக இருக்கும் கனிகா, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.
இதைப்பற்றி கனிகா கூறும்போது, நான் 11 வருடங்களுக்கு முன்னால் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படம் மூலம் நடிகையாக அறிமுகமானேன். தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறேன். இப்படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மணிரத்னம் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாகவும், நித்யாமேனன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

கருத்துரையிடுக