தெற்கு கலிபோர்னியா பல்கலையில், அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, இணையப் பயன்பாடு, சில நாடுகளில் கதிரவன்
உதிக்கும் நேரத்தில் தொடங்கி, அதிகரித்துப் பின் இரவில் மொத்தமாக நின்றுவிடுகிறது என்று தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், இணையப் பயன்பாடு இரவு பகல் எந்நேரமும் சுறுசுறுப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில், சற்று அதிகமாகவே இது உள்ளது. இரண்டு மாத காலத்தில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. ஏறத்தாழ 37 லட்சம் ஐ.பி. முகவரிகளில் மேற்கொள்ளப்படும் இணையப் பயன்பாடு கணக்கில் எடுக்கப்பட்டது.
நம் வாழ்வில், வாழ்க்கை நடைமுறைகளுக்கும், வர்த்தக அலுவலகப் பயன்பாட்டிற்கும் இணையப் பயன்பாடு மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. அது திரைப்படங்களைப் பார்ப்பதாகட்டும் அல்லது வர்த்தக தளங்களில் பொருட்களை வாங்குவதாகட்டும், இணையம் நமக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்துவிட்டது.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே இணையப் பயன்பாடு உள்ளது. எந்த அளவிற்கு, ஒரு நாடு செல்வச் செழிப்புள்ளதாக உள்ளதோ, அந்த அளவிற்கு இணையப் பயன்பாடும் அதிகமாக உள்ளது.

கருத்துரையிடுக