கேடி படத்தின் மூலம் கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த தமன்னா, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த
தாண்டவம், பையா, கண்டேன் காதலை,சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
* இந்த வருஷம் தீபாவளி எங்க கொண்டாடப் போறீங்க?
நிறைய தீபாவளி, சூட்டிங்ல தான் இருந்திருக்கேன். ஆனால் இந்த வருஷம் என் மும்பை வீட்டில், அப்பா, அண்ணன், அம்மா இப்படி குடும்பத்தோட கொண்டாடப் போறேன். பூஜை வீட்டில் முடிந்த பிறகு மகாலஷ்மி கோயில் போகப் போறேன். இந்த வருஷம் தீபாவளி செம கொண்டாட்டம் தான்.
* பட்டாசு, பலகாரம், புதுடிரஸ் உங்களோட சாய்ஸ்?
சின்ன வயசிலே, பட்டாசு வெடிக்கிற நிறுத்திட்டேன். சத்தம் பிடிக்கல. பட்டாசுனாலே அலர்ஜி. ஸ்வீட்ஸ் எனக்கு பிடிக்கும். லட்டு மும்பையோட ஸ்பெஷல். நிறைய வெரைட்டி லட்டு கிடைக்கும். என் பேவரேட் லட்டு தான். புது டிரஸ் அப்படினு பிளான் பண்ணி எடுக்க மாட்டேன். என் நட்புகுரிய காஸ்ட்யூமர் நிஷ்கா லுக்காவிடம் கடைசி நிமிடத்தில் எனக்கு புது டிரஸ் அனுப்புங்கனு சொல்லி வாங்குவேன். தீபாவளிக்கு முதல்நாள் அவங்க கொடுக்கும் டிரஸ் தான்.
* வீரம் படத்திற்கு பிறகு தமிழ் பக்கமே காணாம இருக்கீங்களே? என்ன காரணம்?
3 மொழிகளில் நடிச்சிட்டு இருக்கேன், பகுபலி வரலாற்று படம். 2 மொழிகளில் பெரிய அளவில் தயாராகும் படம். எனக்கு முக்கிய ரோல். இந்தியில் 2 படங்கள். பிஸியான நேரம், தமிழ்ல வீரம் படத்துக்கு பிறகு, இப்போ ஆர்யா, தயாரித்து நடிக்கும் படத்தில் நான் நடிக்க போறேன். ராஜேஷ் இயக்கப் போறார். என் ரோல், இதுவரை பண்ணல, நல்ல, இயல்பா அமைந்த காமெடி கேரக்டர். அழகான ரோல் எனக்கு கடைச்சிருக்கு. நவம்பரில் சூட்டிங், திரும்ப தமிழ்க்கு வரது சந்தோஷம்.
* உங்களுக்கு சிபாரிசு செய்தது ஆர்யாவா?
இயக்குநர் ராஜேஷ், ஆர்யா 2 பேரும் தான் என்னை தேர்வு செய்திருக்காங்க. ஆர்யாவோட சொந்த தயாரிப்பு நிறுவனம். இதுவரை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கல. இதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம்.
* தமிழ், இந்தி, தெலுங்கில் எந்த மொழி படத்தில் ரொம்ப சேலஞ்ச் பண்றமாதிரி கேரக்டர் அமையுது?
என் படங்களில் இதுவரை பெரிய சேலஞ்ச் பண்ணி நடிக்கிற ரோல் எதும் இல்லை. ஆனால் ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி படத்தில், அப்படி ஒரு ரோல். முதலில் தெலுங்கில் பேசி நடிக்கனும். அப்புறம் தமிழில் பேசி நடிக்கனும். படம் வந்த பிறகு நீங்களே சொல்விங்க, அவ்ளோ சேலஞ்ச்சான ரோல் அது.
* ஹிந்தியிலே உங்களுக்கு பெரிய போட்டியே இருக்கு போல?
ஹிம்மத்வாலா படத்தை வச்சி மட்டும் பேசியட முடியாது. இப்ப கூட எனக்கான வேலை என்னவோ அதை சிறப்பா படத்தில் முடிச்சி கொடுக்கிறேன். படத்தோட ரிசல்ட் என் கையில் இல்லை. எப்போதும் நான் போட்டியா பார்ப்பதும் இல்லை. எடுத்துக்கிறதும் இல்லை. எனக்கு வரவேண்டிய படம் எனக்கு வரும்.
* ஒரு தோல்வியை எப்படி எடுத்துக்குவிங்க?
என் உழைப்பு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா அது சரியா போகலனா, ஒரு வருத்தம் வருவது இயல்பு தானே? பையா, அயன், படிக்காதவன் படங்கள் எல்லாம் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள், வீரம் படம் கூட ரசிகர்களிடம் நல்ல வரவேண்டிய பெற்றது. ஒரு சில படங்கள் தோல்வி தந்தால், எப்படியும் அடுத்த படத்தில் சரிசெய்திட வேண்டும் என்ற எண்ணம் வந்திரும்.
* தமிழ் இவ்ளோ சரளமா பேசுறீங்களே எப்படி ?
நடிப்பை வெளிப்படுத்த மொழி தெரிவது அவசியம். சூட்டிங்ல இயக்குநர்கள் கிட்ட தான் அதிகமா கத்துகிட்டேன். அவங்க, அந்த கேரக்டரை எனக்கு சொல்லி கொடுத்த விதம், செட்டில் எல்லார் கூடவும் முடிந்தவரை, தமிழ் பேச பழகி கொண்டேன். இப்போது நல்லாவே பேசுகிறேன்.
* உங்களை எப்போதாவது மாத்தி கொண்டிருக்கீங்களா?
நான் சினிமாவுக்கு 16, 17 வயசிலே வந்திட்டேன். எனக்கு எதைப் பற்றியும் தெரியாது. எல்லாத்துக்கும் பயந்த சுபாவம். வீட்டை விட்டு வெளியே போக பயப்படுவேன். இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் போதும் மும்பைல இருக்கும் போதும் என் சொந்த வீட்டில் இருக்கிற ஃபீல் வரும். இப்போ கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. பக்குவம் வந்திருக்குனு நினைக்கிறேன்.
* தமிழ்ல ரொம்ப ஈஸியா உங்களோடு பழகும் நடிகர்கள் யார்?
ஜெயம் ரவி குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப என்கரேஜ் பண்ணிருக்காங்க. நீங்க ரொம்ப நல்லா வருவிங்க, இன்டஸ்ட்ரில நல்ல பேர் உங்களுக்கு கிடைக்கும்னு தனுஷ் சொல்லுவார். வீரம் இயக்குநர் சிவா சார், என் வாழ்க்கைல நிறைய பங்கெடுத்திருக்கார். நிறைய டிஸ்கஸ் பண்ணிருக்கேன் அவரிடம். மரியாதைக்குரியவர்.
* என்ன மாதிரி ரோலில் நடிக்க ஆசை இருக்கு?
இப்ப டிரென்ட் ஹாரர் படங்கள் தான். நல்ல பயமுறுத்துற ஒரு பேய் படத்தில் நடிக்கனும்னு ஆசை இருக்கு.
* எந்த இயக்குநர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வரனும்னு எதிர்பார்ப்பிங்க?
ஷங்கர் சார் படங்களில் நான் நடிக்கல. முருகதாஸ் சார் படங்கள் நிறைய பார்க்கிறேன். ரொம்ப நல்ல படங்களை பண்றாங்க. இவங்க மாதிரி இயக்குநர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கேன். பார்க்கலாம்.
* சூர்யா-கார்த்தி - ஒரு குறிப்பு ?
சூர்யா ரொம்ப அனுபவசாலி நடிகர். கூர்ந்து கவனிப்பார். கார்த்தி ரொம்ப எனர்ஜி. துறுதுறு. அவர் பருத்திவீரன் படம் பார்த்து அசந்து போயிட்டேன். இப்பகூட மெட்ராஸ் படம் ஹிட் ஆச்சுனு கேள்விபட்டேன். சந்தோஷமா இருக்கு.
* உங்க படங்களில் உங்களுக்கு ரொம்ப மனசுக்கு நெருக்கமான படங்கள் எது ?
கல்லூரி படம் பிடிக்கும். அப்புறம் கண்டேன் காதலை படம். பையா, வீரம் இந்த படங்கள் எல்லாம் எப்பவும் என் மனதிலே நிற்கும்.
* உங்கள் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது....
நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் சப்போர்ட் இல்லைனா, அடுத்த லெவலுக்கு அவங்க போக முடியாது. மொழி தாண்டி வர்றவங்கள கூட, தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போயிட்டால், கொண்டாடுவாங்க. என்னையும், இத்தனை வருஷமா கொண்டாடி, என் வளர்ச்சிக்கும் என்னை பேச வைத்ததற்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன்.

கருத்துரையிடுக