மாதவிடாய் வலியும் உணவு முறையும்

மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வலி, சோர்வு போன்ற பிரச்சனைகளால் பெரிதும் அவதிப்படுவர். எனவே இந்த சமயங்களில்
பெண்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். மேலும் உடலை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். 

சில நேரங்களில் யோனித் திசுவானது கர்ப்பப்பையைவிட்டு, பிற பகுதிகளில் போய்ப் படிந்து விடுகிறது. ஹார்மோன்களே இதற்குக் காரணம். இது வலியையும், மகப்பேறு இன்மையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு இந்திய மருத்துவத்தில் தலைசிறந்த சிகிச்சைகள் உள்ளன. முதலில் இந்த நிலையை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். 

இந்த நோயாளிகள் கடுமையான இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். சிலருக்கு லேசாகவும், சிலருக்குக் கடுமையாகவும் வலி இருக்கலாம். இரண்டு பக்கங்களிலும், முதுகு, கால், இடுப்பு, ஆசனவாய் ஆகிய இடங்களில் வலி வரும். சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம். 

உடலுறவில் ஈடுபடும்போது வலி இருக்கும், வேகமாக மூத்திரம் போதல் காணப்படலாம். இவற்றுக்கெல்லாம் பல நிலைகள் உள்ளன. கர்ப்பப்பை, சினைமுட்டை, மலப்பகுதி, மூத்திரப் பகுதி போன்றவற்றில் வலி ஏற்படும். கசிவும் ஏற்படலாம். 

இவற்றை வாதஹரமாகவும், ரக்த பிரஸாதனமாகவும் உள்ள வஸ்தி சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். பெண்களைப் பாடாய்ப்படுத்துகிற வேறொரு நோயும் உண்டு. இதற்கு Endometriosis என்று பெயர். 

சேர்க்க வேண்டியவை: வாழைப் பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள். 

தவிர்க்க வேண்டியவை: மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய். மாதவிடாய் சமயங்களில் அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget