கிளப் டான்ஸில் கலக்குவாரா த்ரிஷா

தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா, நதியா மற்றும் பலர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. இந்தப் படம்
தற்போது கன்னடத்தில் 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் நாயகனாக நடிக்க, உருவாக உள்ளதாம். ஒரிஜனல் தெலுங்குப் படத்தில் ஒரு கிளப் டான்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலில் மும்தாஜ் அசத்தலான கிளாமர் டான்ஸில் நடித்தார். அந்தப் பாடலுக்கு கன்னட ரீமேக்கில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியிருக்கிறார்கள். ஒரு கிளப் டான்ஸில் த்ரிஷா நடனமாட உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.த்ரிஷா இப்போதுதான் கன்னடத் திரையுலகில் 'பவர்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முந்தைய கன்னடத் திரையுலகின் பல சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. த்ரிஷாவுக்கும் அங்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால்தான், தெலுங்கில் மும்தாஜ் ஆடிய பாடலுக்கு த்ரிஷா நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளார்களாம். ஆனால், முதலில் இந்தப் படத்தில் த்ரிஷாவைத்தான் நாயகியாக நடிக்க வைக்கலாம் என நினைத்து, அதன் பின் வேறு நாயகியை மாற்றியிருக்கிறார்கள். அப்படியிருக்க, த்ரிஷா அதே படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் எப்படி நடனமாட சம்மதித்துள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget