மைக்ரோசாப்ட்டில் சாதிக்கும் பெண் ஊழியர்கள்

அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில்
பணியாற்றுவோரில் மொத்த பெண் ஊழியர்கள் இதுவரை 24% ஆக இருந்தனர். அண்மையில் இது 29% ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் இயக்குநர் குழுவில் பெண்கள் இதுவரை 33% ஆக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 40% ஆக உயர்ந்துள்ளது. 

ஆனால், பெண்களில் தொழில் நுட்ப வல்லுநர் எண்ணிக்கை 17.5% ஆக மட்டுமே உள்ளது. மொத்த ஊழியர் எண்ணிக்கையில், 28.9% பேர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் மற்றும் அங்கு வாழும் கருப்பு இனத்தவர் மொத்தம் 3.5% ஆக உள்ளனர். அதிக எண்ணிக்கையில் 60.6% ஆக உள்ளவர்கள் ஐரோப்பியர்கள். இதனுடன் ஒப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தில் 30% பேர் பெண்கள். ஐரோப்பியர்கள் 61% பேர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget