சரும பிரச்சனைகளை போக்க என்ன செய்யலாம்

• ஜாதிமல்லி மற்றும் முல்லையில் தலா 10 பூக்கள் எடுக்கவும். அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து நைசாக அரைத்து முகம், உடம்பு முழுவதும் தடவி
20 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு கடலை மாவு, பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இது வெயில் காலத்தில் உண்டாகிற அத்தனை சருமப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். 

• ஒற்றைச் செம்பருத்திப் பூவுடன், 2 பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து வெயில் படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவவும். அரை மணி நேரம் ஊறியதும், குளியல் பொடி உபயோகித்துக் குளித்தால், சரும வறட்சி நீங்கி, தோல் வெண்மையாகவும் மென்மையாகவும் மாறும். 

• தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து, உடல் முழுவதும் தடவவும். சிறிது நேரம் கழித்து சோப் உபயோகிக்காமல் குளிக்கவும். இது சருமத் துவாரங்களை டைட் செய்து, உடனடியாக சருமத்துக்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும். வெயில் காலத்தில் வாரம் 2 முறையாவது இதைச் செய்து வந்தால், சருமத்தை ஒரே சீரான நிறத்துடனும், மென்மையுடனும் பராமரிக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget