தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

பெண்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும்போது கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். 


• ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் 5 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். 

• நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் தவிர்க்கலாம். 

• நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும். 

• ஹால்மார்க் தரச்சான்று அளித்த பரிசோதனைக் கூடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். இதைக் கொண்டு எந்த இடத்தில் நகைக்கு தரச்சான்று வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். 

• அனைத்து ஹால்மார்க் நகைகளும் 22 காரட் (91.6 சதவீதம்) தங்கம் சேர்க்கப்பட்ட நகைகளாக இருக்கும் என கருதக் கூடாது. ஹால்மார்க் என்பது தரத்துக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே. 

எனவே 18 காரட், 20 காரட் என எந்த மதிப்பிலான தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 22 காரட் என நகையின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது வாங்க வேண்டியது மிகவும் அவசியம். 

• ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகள் என்பதைக் குறிக்கும் முக்கோண வடிவிலான குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். அதை உறுதி செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டும். 

• வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மற்றும் பரிசோதகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். 

• பெண்கள் நகைகள் வாங்கிவிட்டு சில நூறுகளை சேமிப்பதற்காக ரசீது வாங்குவதில்லை. தங்க நகைகளைப் பொருத்த வரையில் 1 சதவீதம் மட்டுமே விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பவுன் நகை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.220 மட்டுமே வரியாக செலுத்த வேண்டும். அதை சேமிப்பதற்காக நாம் ரசீதின்றி நகை வாங்கக் கூடாது. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget