பணிக்கு செல்லும் பெண்களுக்கான அழகு சாதனப்பொருட்கள்

பொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை
பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 

ஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் :

* நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது. 

* முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த பிறகே இவற்றை முகத்தில் தடவ வேண்டும். 

* இந்த க்ரீமை உள்ளங்கையில் எடுத்துகொண்டு முகத்தில்பொட்டு வைப்பது போல் வைத்து முகம் கழுத்து போன்ற இடங்களில் பரவலாக தடவ வேண்டும். 

* இது உலர்ந்த பிறகு நாம் உபயோகிக்கும் பௌடரை முகத்தில் போட வேண்டும். 

* முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம் என எல்லா இடமும் சீராக இருப்பது போல் தடவும் பொழுது முகம், கழுத்து எல்லாமே ஒரே நிறத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்கும். 

* அலுவலக உணவு இடைவெளியில் கூட இவற்றை போட்டு கொள்வது நல்லது. 

ஹேர் சீரம் : நாம் வெளியில் செல்லும் பொழுது நம் தேசத்தில் நிறைய தூசுகள் சேர்ந்து விடுகின்றன. அதிலும் வண்டியில் செல்லும் பொழுது நம்முடைய கூந்தல் கலைந்து நம் மயிர்க்கால்களில் நேரிடையாகவே அழுக்குகள் படிந்து விடுகின்றன. 

இதனால் கூந்தல் உதிர்வு, பொடுகு, மண்டையில் மேற்புறத்தோல் வறண்டுவிடுவது என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தடவும் பொழுது தலை வறண்டு போகாமல், கூந்தலை பளபளப்பாகவும், பிசுக்கில்லாமலும் வைத்துக்கொள்கிறது. தலைமுடி டேமேஜகாமலும் காப்பாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற ஹேர் சீரம் உபயோகிப்பது சிறந்தது. 

காஜல் : இப்போது வரும் காஜல்கள் பல மணி நேரங்கள் வரை கண்களில் இருந்து அழியாமல் இருக்கின்றன. அழகிய பென்டைப்களில், சிறிய பென்சில்கள் போன்றும் வெளியில் செல்லும் பொழுது எடுத்துச்செல்வதற்கு வசதியாக வந்து விட்டன. மை கைகளில் ஒட்டிக்கொள்ளும் என்ற கவலையே இல்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget