பட்டுச்சேலை பராமரிப்பு தகவல்கள்

எவ்வளவோ விலை கொடுத்து எடுத்த பட்டுச்சேலைகள் அடிக்கடி உபயோகப்படுத்தப்படாமல் பராமரிப்பும் இல்லாமல்
கிழிந்து போய் நம்மை வேதனை அடையச்செய்யும். ஜரிகை வேலைப்பாடு நிறைந்த சேலைகளை எப்படித்தான் பராமரிப்பது? இப்போது சில டிப்ஸ்.

* பட்டு சேலைகளை பிளாஸ்டிக் பைகளில் மடித்து வைக்காமல் துணிப்பைகளில் மடித்து வைப்பதோ அல்லது தூய்மையான காட்டன் துணிகளில் சுற்றி வைப்பதோ நல்லது.

*  60 நாட்களக்கு ஒரு முறை பட்டுச்சேலைகளை நிழலில் காயப்போட்டு மடித்து வைப்பதால் பூஞ்சானம் பிடிப்பது போன்ற பேச்சுக்கு இடமில்லை.

*  நேராக வெயிலில் பட்டுச்சேலைகளை உலர்த்தினால் சேலைகளில் நிறமானது வெளுத்து போக வாய்ப்புள்ளது.

* பட்டுச்சேலைகளை எப்பொழுது பயன்படுத்தபோகிறோமோ அப்பொழுது இஸ்திரி போடுவதே சிறந்தது.

* இஸ்திரி போட்டு பிரிக்கப்படாமலேயே பட்டுச்சேலைகளை வைத்திருக்கும் போது அதன் மடிப்புகளில் விரைவிலேயே துணி கிழிய ஆரம்பித்து விடும்.

* அதே பேர்ல இஸ்திரி போட்டு பட்டுச்சேலைகளை ஹேங்கரில் தொங்க விடிக்கூடாது. இதனால் புடவைகளில் கரை ஏற்பட வாய்ப்புள்ளது.

*  புடவைகளை பெட்டிகளில் (சூட்கேஸ்கள்)வைத்து பூட்டி வைக்கவும் கூடாது.

* அலமாரிகளில் காட்டன் பை அல்லது துணிகளில் சுற்றி வைப்பதே சிறந்தது.

* மேலும் நாப்தலீன் உருண்டைகளை நேரடியாக புடவைகளில் படுவது போல் போடக்கூடாது. அவற்றில் இருக்கும் இரசாயனப்பொருட்கள் பட்டு சேலைகளில் கறைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget