படிப்பு ஆசையில் பாலிவுட் வாய்ப்பை உதறிய ஸ்ரேயா சர்மா

ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அவர் தற்போது தெலுங்கில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து
விட்டார். அவரது முதல் படம் சிரஞ்சீவா. தற்போது காயாகுடு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை படிப்புக்காக மறுத்து விட்டார். 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பம் சினிமா பின்னணி கொண்டதல்ல. சிறு வயதில் துறுதுறு என்று இருந்தால் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிரஞ்சீவா படத்திற்கு நடிகர், நடிகைகள் கேட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அதற்கு என்னுடைய போட்டோக்களை அனுப்பி இருந்தோம். அதோடு என்னோட பயோடேட்டாவை பார்த்து விட்டு உடனே வாய்ப்பு கொடுத்தார்கள்.

தற்போது காயாகுடு படத்தில் 19 வயது கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். எனக்கு 17 வயதுதான் ஆகிறது. பிளஸ்-2 படிக்கிறேன். படிப்போடு நடிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒரு இந்திப் படத்தில் நடிக்க கேட்டார்கள். அப்பா படித்து முடித்ததும் நடிக்கலாம் என்று சொல்லிவிட்டார். இனி பள்ளி படிப்பை முடித்த பிறகுதான் நடிப்பு. பரீட்சைக்கு தீவிரமாக படித்து வருகிறேன். என்கிறார் ஸ்ரேயா சர்மா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget