காதலை பற்றி மனம் திறக்கும் அனுஷ்கா

அஜீத்தின், 55வது படத்தில் த்ரிஷா - அனுஷ்கா என்று இரண்டு நாயகிகள் இருந்தபோதும், த்ரிஷா தான் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
அனுஷ்காவுக்கு, அஜீத்தை ஒரு தலையாக காதலிக்கும் வேடம் தானாம். ஆனபோதும், இந்த வேடத்தை முழுதிருப்தியுடன் ஏற்று நடித்து வரும் அனுஷ்கா, அதற்கு காரணம் இருப்பதாகவும் சொல்கிறார். அவர் கூறுகையில், நான் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, என்னை பல மாணவர்கள் ஒருதலையாக காதலித்து வந்தனர். அதில் சிலர், என் கவனத்தை திருப்பி தங்களது காதலை கூறினர். ஆனால் நான், அதை ஏற்கவில்லை. அதன் பின், அவர்களது முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது. அதனால், இப்போது எனக்கு ஒருதலையாக காதலிக்க கூடிய வேடம் கிடைத்தபோது, அந்த பழைய சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தன என, பிளாஷ் பேக்கில் மூழ்குகிறார் அனுஷ்கா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget