வில்லியாக சொல்லி அடித்த சுதா

தெய்வம் தந்த வீடு தொடரில் வில்லியாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். வில்லி கேரக்டரில் நன்றாக நடித்தால் ஹீரோயினை விட பெயர்
வாங்கி விட முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது: வில்லியாக நடிப்பது ஒன்றும் எனக்கு புதிதில்லை. இந்தியில் ஒரு தொடரில் கொடூரமான வில்லியாக நடித்தேன். அந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் ஹீரோயினாக நடித்த நடிகையை விட நான் அதிகம் பேசப்பட்டேன். காரணம் அதில் எனது மிரட்டலான நடிப்பு, நான் அணிந்திருந்த புடவைகள், நகைகள்.

தமிழில் தெய்வம் தந்த வீடு தொடரில் மென்மையான வில்லிதான். மயூரி சுதா என்று என்னை அழைத்தவர்கள் இப்போது தெய்வம் தந்த வீடு தொடரின் கேரக்டர் பெயரான சித்ராதேவி என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் அவர்கள் மனதை பாதித்திருக்கிறது. இதுதான் ஒரு நடிகைக்கு கிடைக்கும் பெரிய அங்கீகாரம், விருது எல்லாமே. என்கிறார் சுதா சந்திரன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget