புது கெட்டப்பில் அனுஷ்கா

அனுஷ்கா ருத்ரமாதேவி படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை கதையே இப்படம்.


இதில் அனுஷ்கா ருத்மாதேவி ராணி வேடத்தில் நடிக்கிறார். அதிக பொருட் செலவில் படம் தயாராகிறது.

அனுஷ்காவின் ராணி கெட்டப் படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இன்று இன்னொரு ‘கெட்டப்’ படம் வெளியானது.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து அப்படத்தின் டைரக்டர் குணசேகரன் கூறியதாவது:–

ராணி ருத்ரமா தேவி கதையை 2002–ல் தயார் செய்தேன். ராணி வேடத்தில் நடிக்க நடிகை தேடினேன். யாரும் பொருத்தமாக இல்லை. அப்போதுதான் அருந்ததி படம் வந்தது. அதில் அனுஷ்கா நடிப்பு பிரமிக்க வைத்தது. அபாரமாக நடித்து இருந்தார். ருத்ரமாதேவி ராணி வேடத்துக்கு நடிகை கிடைத்து விட்டார் என்று சந்தோஷப்பட்டேன். படவேலைகளை உடனடியாக துவக்கினேன்.

அனுஷ்கா கடும் உடற்பயிற்சிகள் எடுத்து இந்த படத்தில் நடித்து வருகிறார். ராணி கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை தயார் படுத்திக் கொண்டார். எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்.

சினிமாவில் கதை, பணம் இருந்தாலும் கேரக்டருக்கு பொருத்தமானவர்கள் அமைந்தால்தான் படம் சிறப்பாக வரும்.

கிளைமாக்ஸ் காட்சியில் வாள் சண்டை போட்டு நடித்தார். அப்போது கையில் காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் நடித்தார். 150 அடி உயர கிரேனில் தொங்கியபடி சண்டை போட்டார். இந்த சண்டை காட்சியை மட்டும் ரூ. 7 கோடி செலவில் படமாக்கி உள்ளோம்.

இவ்வாறு டைரக்டர் குணசேகரன் கூறினார்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget