வெண்டைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 1 கப் 
சின்ன வெங்காயம் - 10 
தயிர் - 3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

உப்பு - சுவைக்கு ஏற்ப 
கடுகு,உளுந்த பருப்பு - தாளிக்க 
கரிவேர்பிலை - கொஞ்சம் நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் 

செய்முறை

வெண்டைக்காயை கழுவி ஒரு சுத்தமான துணியில் துடைத்து கொள்ளவும். பிறகு அதை 1/2 சென்டிமீட்டர் அளவிற்கு அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக அரிந்து கொள்ளவும். அடி கனமான கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்த பருப்பு,கரிவேர்பிளை போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கியதும், வெண்டைகாயை போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கிய பிறகு , கொஞ்சம் பிசு பிசு என்று வரும் பொழுது - தயிர் ஊற்றி வதக்கவும். கொஞ்சம் வெந்த பிறகு மிளகாய் தூள்,உப்பு போடவும். ஒரு நிமிடம் இடை வெளி விட்டு ,சிறுது சிறிதாக நல்லெண்ணெய் ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.இல்லை என்றால் அடி பிடித்து விடும். வெண்டைக்காய் நன்றாக வெந்த பிறகு இறக்கவும் 

குறிப்பு: இரும்பு கடாயில் செய்தால் இன்னும் சுவை கூடும்.தண்ணீர் சேர்க்காமல் வெண்டைக்காய் வேக ரொம்ப நேரம் ஆகும். இதை செய்வதற்கு பொறுமை அவசியம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget