வீட்டுக்கு சாவியாகும் ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு. இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட் போனே பயன்படலாம்.
அமெரிக்காவின் ஸ்டார்வுட் ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் புளுடூத் வசதி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட் போன் அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும்போது அறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக, ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்கு சென்று ஸ்மார்ட் போனைக் காட்டிக் கதவைத் திறக்கலாம்.

மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன. இந்த வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது. ஸ்மார்ட் போன்போல ஸ்மார்ட் வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர். ஹோட்டல் மட்டுமா, வீடுகளுக்கும் ஸ்மார்ட் கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget