சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன்-அரைகிலோ
இஞ்சி பூண்டு விழுது-இரண்டு தேக்கரண்டி
வெங்காயம்-ஒன்று
குடமிளகாய்-ஒன்று
பச்சைமிளகாய் விழுது-இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த் தூள்-ஒரு தேக்கரண்டி

சோளமாவு-அரைக் கோப்பை
சோயா சாஸ் -இரண்டு மேசைக்கரண்டி
உப்ப-தேவைக்கேற்ப
அஜினோமோட்டோ-அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி-சிறிது
எண்ணெய்-பொரிக்க தேவையானளவு

செய்முறை :

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கவும்,

ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, 1tsp இஞ்சிபூண்டு விழுது, 1tsp பச்சைமிளகாய் விழுது, மிளகாய்த்தூள், 2tsp சோயாசாஸ் உப்பு சேர்த்து கலக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்,

கடாயில் எண்ணெயை காயவைத்து சிக்கனைப் போட்டூ பொன்னிறமாக பொரித்து வைக்கவும்,

மற்றொரு கடாயில் 2மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து இஞ்சிபூண்டூ,பச்சைமிளகாய் விழுதை போட்டூ வதக்கி வெங்காயம் குடமிளகாய் போட்டு,சோயாசாஸ்,அஜினொமோட்டோ சேர்த்து கிளறவும்,

பின்பு அதில் பொரித்த சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும்,

பின்பு ஒரு மேசைக்கரண்டி சோளமாவை நீரில் கரைத்து ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget